அக்டோபரில் திரைக்கு வரும் படங்கள்

இந்த ஆண்டில் இதுவரை 150க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்துள்ள நிலையில் அடுத்த மூன்று மாதங்களில் 50 படங்களுக்கும் மேல்
வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் 'ஐ, கத்தி, பூஜை' ஆகிய படங்களால் நவம்பர் மாதம் ஒரு சில வாரங்களுக்கு எந்தப் படமும் வெளியாகாத சூழ்நிலை உருவாகலாம் என்றும் சொல்கிறார்கள். அந்த மூன்று படங்களுமே பெரும்பாலான திரையரங்குகளை ஆக்கிரமித்து விடும் என்பதால்தான் அந்த நிலை வரும் என்கிறார்கள். அதனால் முடிவடைந்துள்ள பல படங்களை தீபாவளிக்கு முன்னதாகவே வெளியிட பல தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளார்களாம்.

அதனால் அக்டோபர் மாதம் சுமார் 30க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இன்னும் சில நாட்களில் ஜீவா, துளசி நடித்துள்ள 'யான்' படம்தான் அடுத்த பெரிய படம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து “ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, திருடன் போலீஸ், தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், தெரியாம உன்னை காதலிச்சிட்டேன், சுற்றுலா, அர்ஜுனன் காதலி, குபீர், சோக்கு சுந்தரம், நான் பொன்னொன்று கண்டேன், ஜமாய், வருச நாடு, யாவும் வசப்படும், ஆ, அர்ஜுனின் ஜெய்ஹிந்த் 2, கப்பல், நம்பியார், மகாபலிபுரம்,” என வெளியாக உள்ள படங்களைப் பற்றிய ஒரு நீ.....ளமான பட்டியல் உள்ளது. இவற்றில் சில படங்கள் அக்டோபர் மாதத்தில் வராமலும் போகலாம், இந்தப் பட்டியலில் இல்லாத ஒரு சில படங்கள் வந்தாலும் வரலாம். 

நவம்பரில் 'உத்தம வில்லன், காவியத் தலைவன், அனேகன், மீகாமன், வை ராஜா வை' போன்ற படங்கள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தமாகப் பார்த்தால் 2014ல் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை 250 ஐத் தொட்டாலும் ஆச்சரியமில்லை.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget