நடிகை நேகாவின் அசத்தல் பேட்டி

என்னைப் பார்ப்பவர்கள் நான் சிநேகாவின் ஜெராக்ஸ் போன்று இருப்பதாக சொல்கிறார்கள். அதனால் சினேகாவின் ரசிகையான எனக்கு
சினேகா சினிமாவில் விட்டுச்சென்ற இடத்தை பிடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டிருக்கிறது என்கிறார் நடிகை நேகா.

சினிமாவுக்கு வந்தது பற்றி சொல்லுங்கள்?

என் அம்மா சினிமாவில் பல படங்களில் டான்சராக நடித்துள்ளார். அதனால் ஏற்கனவே சினிமா பற்றி தெரியும் என்பதால் நானும் நடிக்க வந்தேன். காதல் பஞ்சாயத்து என்ற படத்தில் முதலில் கமிட்டானேன். ஆனால் அந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை. அதன்பிறகு நடித்த காதல் 2014 படம் திரைக்கு வந்தது. அந்த படத்தில் எனது நடிப்புக்கு ரொம்ப நல்ல பெயர் கிடைத்தது. முதலில் என் அம்மாதான் கதை கேட்டார். நான் அவுட்லைன் மட்டும்தான் கேட்டேன்.

குறிப்பாக, சிலர் சினேகாவை மாதிரியே நடித்திருக்கிறாய் என்றார்கள். அது எனக்கு பெரிய எனர்ஜியாக இருக்கிறது. மிகப்பெரிய நடிகை சினேகா. அவருடன் என்னை ஒப்பிட்டு பேசியது எனக்கு நடிப்பின் மீது இன்னும பெரிய ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. அதனால், சினிமாவில் சினேகா விட்டுச் சென்றுள்ள இடத்தை கைப்பற்ற வேண்டும் என்று தற்போது அவர் பாணியில் குடும்பப்பாங்கான கதைகளாக தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கியிருக்கிறேன். முக்கியமாக காதல் 2014 படத்தில் லேடீசுக்கு எனது நடிப்பு ரொம்பவே பிடித்திருந்தது. அதனால் லேடீசை கவர் பண்ணும் வேடங்களுக்கு முதலிடம் கொடுப்பேன்.

மற்றவர்கள் சொல்வது இருக்கட்டும் உங்கள் நடிப்பைப்பற்றி நீங்கள் என்ன நினைத்தீர்கள்?

இன்னும் நல்லா பர்பாமென்ஸ் பண்ணியிருக்கலாம் என்று நினைத்தேன். டைரக்டர் ஹீரோ அனைவரும் உன்னோட நடிப்பு நேருல கம்மியா இருந்ததான நெனச்சேன். ஆனால் டப்பிங்குல பார்த்தபோது தேவையான அளவுக்கு நடிப்பு இருந்ததைப்பார்த்து . சந்தோசமா இருந்தது என்றார்கள். எந்தகுறையும் இல்லை என்றார்கள். ஆனால் என்னைப்பொறுத்தவரை இதெல்லாம் பத்தாது. இன்னும் நன்றாக நடிக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். அதனால் முதல் படத்தில் இருந்த சின்னச்சின்ன குறைகள்கூட இனிமேல் நடிக்கும் படங்களில் இருக்கக்கூடாது என்று இப்போது இன்னும் நன்றாக நடித்துக்கொண்டிருக்கிறேன்.

சினேகா இடத்தை பிடிப்பேன் என்கிறீர்களே? அது அத்தனை எளிதான விசயமா?

அவருக்கு கிடைத்தது மாதிரி நல்ல கதைகள் அமைந்தால் பிடித்து விடலாம். மேலும், அவர் முதல் படத்திலேயே பிரசாந்துடன் நடித்தார். ஆனால் நான் ஹரிசுடன் நடித்தேன்.இருப்பினும் எனக்கும் நல்ல கதாபாத்திரம் கிடைத்தது. அதனால்தான் பலருக்கு என் மீது நம்பிக்கை ஏறபட்டிருக்கிறது. மற்றவர்கள் என்னை பாராட்டியதைப்பார்த்துதான் இப்போது என் மீது எனக்கு அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதனால் இப்போது பிராண்மலை, மதிப்பெண் ஆகிய படங்களில் முழுசாக கதாபாத்திரத்தில் மூழ்கி நடித்துக்கொண்டிருக்கிறேன்.

பிராண்மலை படத்தில் எந்த மாதிரியான ரோலில் நடிக்கிறீர்கள்?

காதல் 2014 படத்தில் எனது நடிப்பைப்பார்த்து விட்டுத்தான் இந்த வாய்ப்பு தேடி வந்தது. அவர்கள்தான் என்னை சினேகாவின் ஜெராக்ஸ் மாதிரி இருப்பதாக சொன்னார்கள். மேலும் பிராண்மலையில் ஹீரோயினை மையமாகக் கொண்ட கதை. அதனால் எனக்கு பர்பாமென்ஸில் ஸ்கோர் பண்ண நிறைய வாய்ப்பு கிடைத்தது. மதுரை கதைக்களம் என்றால் வெட்டு குத்து என்பதெல்லாம் இப்படத்தில் அதிகமாக இல்லை. பேமிலி செண்டிமென்ட்டுதான் அதிகமாக உள்ளது. கே.எஸ்.ரவிக்குமாரின் உதவியாளர் ராஜபாண்டி அந்த படத்தை இயக்கியிருக்கிறார். வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.

ஏற்கனவே நீங்கள் நடித்துள்ள காதல் பஞ்சாயத்து, இந்தியா பாகிஸ்தான் படங்களில் உங்கள் கதாபாத்திரம் ப்றறி சொல்லுங்கள்?

காதல் பஞ்சாயத்து ராணிப்பேட்டையில் நடக்கிற கதை. வில்லேஜ்-சிட்டி என இரண்டும் கலந்த கதை. அந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை. வரும்போது நான் பேசப்படுவேன். அதேபோல் விஜய்ஆண்டனியின் இந்தியா பாகிஸ்தான் படத்தில் முக்கிய வேடத்தில கமிட்டாகி ஒருநாள் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டேன். ஆனால், அந்த நேரத்தில் விஜய் ஆண்டனி சலீம் படத்திலும் நடித்துக்கொண்டிருந்ததால். இந்தியா-பாகிஸ்தான் படபிடிப்பை அப்போது கிடப்பில் போட்டிருந்தனர். அதனால் அந்த நேரத்தில் என்னை தேடி வந்த பிராண்மலை படத்தில் கமிட்டாகி நடித்தேன். அதன்பிறகு ஏற்பட்ட கால்சீட் பிரச்சினையினால் என்னால் இந்தியா பாகிஸ்தான் படத்தில் நடிக்க முடியவில்லை. ஆனால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது எனக்கு வருத்தம்தான்.

கிளாமர், லிப் - லாக் காட்சிகளில் நடிப்பீர்களா?

சினேகாதான் எனது ரோல் மாடல். அதனால் அவர் நடித்தது போன்றுதான் நடிப்பேன். பாண்டி என்ற படத்தில் லாரன்சுடன் ஒரு காட்சியில் அவர் சரக்கு அடித்து விட்டு ஆடியிருப்பார். அப்போதுகூட அவர் பாவாடை தாவணி கெட்டப்பில்தான் இருப்பார். அதில்தான் ஓரளவு கிளாமர் காண்பித்து நடித்தார். அதுபோல் அவசியப்படுகிறபோது அளவான கிளாமரை வெளிப்படுத்துவேன். மற்றபடி லிப்-லாக் காட்சிகளில் நடிக்கிற ஐடியா இப்போதைக்கு இல்லை. அப்படி யாராவது நடிக்க கேட்டால்கூட நிறைய யோசிக்க வேண்டும் .

மேலும்,. காதல் 2014 படத்தில் நான் ஓளரவு கிளாமராக நடித்ததைப்பார்த்து விட்டு சில படங்கள் வந்தது. அதில் ஓவராக கிளாமர் காட்ட சொன்னதால் நடிக்க மறுத்து விட்டேன். அந்த படத்துல பண்ணியிருக்கியே ஏன் என் படத்துலயும் பண்ணக்கூடாது என்ற கேள்வி வரும். அதனால்தான் ஓவராக போய் விடக்கூடாது என்றுதான் அதிக கிளாமர் தேவை என்று சொல்லும் படங்களை தவிர்த்து வருகிறேன். அதன்காரணமாகத்தான், நான் சரித்திர படங்கள் பண்ண ஆசைப்படுகிறேன். பாலா இயக்கிய பரதேசி, சற்குணத்தின் வாகை சூடவா போன்ற பீரியட் படங்களில் நடிக்க எனக்கு அதிக ஆர்வம் உள்ளது.

இப்படி சொன்னால் பெரிய ஹீரோ படங்களில் எப்படி நடிக்க முடியும்?

அதற்காக முழுசுமாக நான் கிளாமருக்கு மறுப்பு சொல்லவில்லை. ஜீன்ஸ், டாப்ஸ் அணிந்தெல்லாம் நடிப்பேன். மேலும் தமிழ் நடிகர்களில் சூர்யா சின்ன வயதில் இருந்தே எனக்கு பிடிக்கும். அவருக்கு பிறகு சிம்பு, ஆர்யாவை பிடிக்கும். அப்புறம் விஜயசேதுபதி ரொம்ப ரொம்ப பிடிக்கும். நான் அவர் நடித்த இதற்குதானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் அவரது நடிப்பைப்பார்த்த பிறகு அவரது தீவிரமான ரசிகையாகி விட்டேன். அவர் செலக்ட் பண்ணுற கதைகளே வித்தியாசமாக உள்ளது. அதனால் அவர் பாணியில் நானும் வித்தியாசமான கதாபாத்திரங்களாக தேடிப்பிடித்து நடிக்கப்பேகிறேன்.

சூர்யாவிடம் உங்களுக்கு பிடித்தது என்ன?

அவரது டான்ஸ் ரொம்ப பிடிக்கும். ஒரு பேட்டியில், ஆரம்பத்தில் எனக்கு டான்ஸ் வரவே வராது என்று சொன்னார் அவர். ஆனால் அதற்காக தன்னை தயார்படுத்திக் கொள்ள எடுத்த முயற்சிகள் பற்றி சொன்னபோது வியப்பாக இருந்தது. மேலும் சூர்யாவின் நடிப்பும் அவரது ஸ்டைலும் எனக்கு ரொம்பவே பிடிக்கும். அதைவிட அகரம் பவுண்டேசன் மூலம் அவர் செய்து வரும் உதவிகள் இன்னும் பிடிச்சிருக்கு. அதுமட்டுமின்றி, அவரது மனைவி ஜோதிகா, தம்பி கார்த்தி, அப்பா-அம்மா என அவரது பேமிலியே எனக்கு பிடிக்கும்.

பேய் வேடத்தில் நடிப்பீர்களா?

நிஜத்தில் எனக்கு பேய், பாம்பு எல்லாம் ரொம்ப பிடிக்கும். அதனால் பேய் படங்களை விரும்பிப்பார்ப்பேன். ஆங்கிலப்படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன். மிரண்டும் போயிருக்கிறேன். சமீபத்தில் சுந்தர்.சியின் இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை படம் ரொம்ப பிடிச்சிருக்கு. அதில், திகில் காட்சிகளை விட காமெடியை ரொம்பவே ரசித்தேன். மூன்று கதாநாயகிகள் என்றாலும் அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்து கதை பண்ணியிருந்தார்.

காமெடி காட்சிகளில் ஆர்வம் எப்படி?

அடுத்தவர்களை சிரிக்க வைப்பது கஷ்டம்தான். வாய்ப்பு கிடைத்தால் பண்ணுவேன். வடிவேலு டிரெண்ட் செட்டர். அவர் காமெடியைப்பார்த்து விழுந்து விழுந்து சிரிப்பேன். சந்தானததின் காமெடி பிடிக்கும். ..சூரி கூட நல்லா பண்றாரு. இப்ப நான் பண்ணியிருக்கிற பிராண்மலையில் கஞ்சா கருப்பு நடித்துள்ளார். என்றாலும் காமெடி காட்சிகளில் காம்பினேசன் சீன்கூட எனக்கு இல்லை. மற்றபடி காதல் பஞ்சாயத்துல வடிவேலு பாலாஜி, ரோபோ சங்கர், ஷகீலா, முத்துக்காளை ஆகியோர் காமெடி செய்துள்ளனர். ஆனாலும் காமெடி காட்சிகளில் நான் சம்பந்தப்படவில்லை. அவர்களுக்குத்தான் காமெடி காட்சிகள் அதிகமாக உள்ளது. மேலும் எதிர்காலததில் ஜனரஞ்சகமான கதைகளில் நடிக்கும்போது எனக்கும் காமெடி காட்சிகளில் நடிக்க சான்ஸ் தருமாறு டைரக்டர்களை கேட்டுக்கொள்வேன் என்கிறார் நேகா.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget