படைப்பின் ரகசியம் தெரியுமா

நம்ம ஜாதகம் என்ன சொல்லுதோ அப்படி தான் எல்லாம் அமையும்போது எந்த கோவிலுக்கு போய் என்ன பரிகாரம் செய்தும் பலன் ? எது
மாறிவிடப்போகிறது ? எல்லாமே விதிப்படி தான் நடக்கும்…...என் தலையெழுத்து என்னவோ அப்படியே நடக்கட்டும் ”... முன் ஜென்ம வினை // கர்மா தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது என்றால் கோவில்கள் எதற்கு, தெய்வங்கள் எதற்கு , பரிகாரங்கள் எதற்கு? ஆராதனைகள் எதற்கு ? அங்கப் பிரதக்ஷிணம் எதற்கு? வீட்டில் உட்கார்ந்து ரெஸ்ட் எடுத்தால் பணம் & நேரம் இதுவாவது மிச்சமாகுமே…? 

எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதா..விரக்தியாகும் நிலையில் நம்மிடம் இருந்து வெளிப்படும் புலம்பல்கள் தான் இது.

முற்பிறவியின் கர்ம பலனுக்கு ஏற்ப அனைவருக்கும் பிறவி ஏற்படுகிறது. அந்த பிறவியில் தனது நிலையில் இருந்து கொண்டு தனக்கு கொடுக்க பட்ட கடமைகளை அனைவரும் செய்தால் மட்டுமே கர்ம பலன் தீரும். கர்ம பலன் தீர்ந்தால் மட்டுமே ஒரு ஜீவன் இறைவனை அடைய முடியும். ஆத்மா இறைவனை அடைந்தால் மட்டுமே மீண்டும் பிறக்காது. மீண்டும் பிறக்காமல் இருந்தால் மட்டுமே ஒருவன் நிரந்தர சுகத்தை அடைய முடியும். இந்த நிலையை எட்டும் வரை ஒருவன் தனக்கு கொடுக்க பட்ட கடமையை செய்ய வேண்டும்

ஒருவன் தனக்கு உண்டான வேலையில் உண்டாகும் பிரச்சனைகளை கண்டு பயந்து ஓடி , சாமியாரை போல் தியானம் செய்வேன் இறைவனை அடைவேன் என்று கடமையை செய்யாமல் ஓடினால் பாவம் மேலும் சேரும். அவன் இறைவனை அடைய முடியாது. கர்மங்கள் இருக்கும் வரை செய்து தான் ஆக வேண்டும். கர்மங்களை செய்து தான் தீர்க்க வேண்டுமே தவிர அதை கண்டு ஓடினால் பாவமே சேரும்

ஒரு மனிதன் வாழ்நாளில் தன்னை பார்ப்பதற்க்கே நேரம் இருக்காது ஆனால் அனைவரும் அடுத்தவர்களை பார்ப்பதற்க்கே அதிக நேரம் செலவு செய்கின்றனர்.

ஒரு சாமியார்(!!) ஒரு தவறை செய்தவுடன் அனைத்து மக்களும் அவரை அவதூறாக பேசினார்கள். ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயத்தில் எதற்கு நாம் தலையீடுகிறோம் என்று ஒருவர் கூட நினைக்கவில்லை. பிற சாமியார்களும் அவரை தவறாக பேசினார்கள். இதில் உண்மை என்னவென்றால் அவன் ஜாலியாக இருந்திருக்கிறான் நமக்கு கிடைக்கவில்லையே என்ற பொறமை தான் இதில் தெரிகிறது.

மனிதன் என்றாலே தவறு செய்வான் என்பது இயல்பு..
ஒரு ஆண் ஒரு பெண்ணோடு தொடர்பு வைத்திருக்கிறான் என்றால் அவனின் தனிப்பட்ட விருப்பம் அது அதில் நாம் ஏன் தலையீடு செய்யவேண்டும்??. உங்கள் வேலை என்னவோ அதனை நீங்கள் பார்க்க தொடங்கிவிட்டால் நீங்கள் எளிதில் ஆன்மீகவாதியாக மாறிவிடலாம். வாழ்க்கையில் பாதிநாள் அடுத்தவனை பார்த்தே நமது பொன்னான நேரத்தை வீணடித்துவிட்டோம். 

பல உதாரணங்களை பார்த்தால் அடுத்தவரின் படுக்கையறையை எட்டிப்பார்த்தே பாதி ஆயுளை வீணடித்து இருக்கிறோம்..அப்படி எட்டிப்பார்த்து ஏதேனும் உங்கள் வாழ்வில் உபயோகமாய் நடந்து இருக்கிறதா ?? ஏதேனும் உங்களுக்கு லாபம் கிடைக்கப்பெற்று இருக்கிறதா ?? குறைந்தபட்சம் ஆதாயம் கிடைத்து இருக்கிறதா ?? எதுவுமே இல்லை ..சில நாட்கள் வெறும் வாயை மெல்ல பயன்பட்டதே அன்றி உபயோகமாய் எதுவும் நடைபெற வில்லை ..

இது போன்று இல்லாமல் நமது நேரத்தை நமக்காக பயன்படுத்துவதே ஆன்மீகத்தின் முதல் நிலை 

ஒவ்வொருவரின் கர்மாபடியே ஒருவரின் வாழ்வு அமையும். அந்த கர்மா அவனை வழிநடத்துகிறது. உங்களின் கர்மாவை நீங்கள் பாருங்கள். அடுத்தவனின் கர்மாவில் நீங்கள் தலையீட்டால் அந்த கர்மாவை நீங்களும் சேர்ந்து தான் சுமக்கவேண்டும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget