அடுத்த மாதம் ரிலீசாகும் ஷகீலா படம்

காலை காட்சி பார்க்கும் ரசிகர்களுக்கு அதிகம் பரிச்சயமான நடிகை ஷகீலா. ஒரு காலத்தில் மலையாளத் திரையுலகையே ஆட்டிப் படைத்தவர்.
மோகன்லால், மம்முட்டி படங்களை விட அவருடைய படம் வசூலைக் குவித்ததைக் கண்டு, அவருடைய படங்களுக்குத் தடை விதித்து கஷ்டப்பட்டு அங்கிருந்து அவரை தமிழ்த் திரையுலகிற்கு அனுப்பி வைத்தார்கள். அதன் பின் தமிழில் “தூள், அழகிய தமிழ் மகன், சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன்' ஆகிய படங்களில் சின்னச் சின்னக் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பே அவர் இயக்குனராக அவதாரம் எடுக்கப் போகிறார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. அதன் பின் அது பற்றிய சத்தத்தையே காணோம். ஆனால், அவர் 'ரொமான்டிக் டார்கெட்' என்ற படத்தை இயக்கி முடித்தே விட்டாராம். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தில் நரேஷ், ஸ்வேதா மற்றும் பலர் நடிக்க ஷகீலாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். 'ரொமான்டிக்' என்பது ஓ.கே. ஆனால் 'டார்கெட்' என்பதுதான் இது அப்படிப்பட்ட படமாக இருக்குமோ என்ற சந்தேகத்தைக் கிளப்புகிறது. படத்தைப் பற்றிய புகைப்படங்களும் மற்ற செய்திகளும் வெளிவந்தால்தான் அதைப் பற்றி தெளிவாகத் தெரியும். இந்த படம் மலையாளத் திரையுலகிலும் கண்டிப்பா ரிலீஸ் ஆகுமாம். அதனால, அவங்களும் கவலைப்படத் தேவையில்லை.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget