கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டியவை

இளம் தம்பதியிரிடம் இருந்து மீண்டும் மீண்டும் கேட்கப்படும் கேள்வி இது. கர்ப்பிணிக்கு எந்த நிலை சவுகரியமோ அதுதான் சரியான நிலை.
குறிப்பாக கணவனின் எடை மனைவியின் வயிற்றை அழுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 

ஓர் உதாரணம்... இருவரும் எதிரெதிரே உட்கார்ந்த நிலையில் உறவு கொள்வது. அதேபோல், படுக்கை அறையில் முரட்டுத்தனம் கூடாது. கலவிக்கு முன்னர் இருவருமே பிறப்பு உறுப்புகளைச் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். 

ஏனெனில், தொற்றுக் கிருமிகள் கர்ப்பிணியையும் சிசுவையும் பாதிக்கும். அதேபோல, ஏற்கெனவே கருச்சிதைவு ஆனவர்கள், அடிக்கடி ரத்தப்போக்கு இருப்பவர்கள் கர்ப்பக் காலம் முழுவதும் பயணம் மேற்கொள்ளவே கூடாது. 

மற்றவர்கள் முதல் மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒன்பதாவது மாதம் வரையிலும் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளலாம். தாய் ஆரோக்கியமாக இருந்தால்தான் சேயும் ஆரோக்கியமாக இருக்கும். 

எனவே, நடைப்பயிற்சி, சுத்தமான காற்று, சத்தான உணவு, நல்ல உறக்கம், மன அமைதி இவை எல்லாமே கர்ப்பிணிப் பெண்ணுக்கு அவசியம். கர்ப்பம் என்று உறுதியானவுடன் அடிக்கடி மகப்பேறு மருத்துவரைக் கலந்தாலோசிப்பது நல்லது. 

மருத்துவரது பரிந்துரை இல்லாமல் எந்தவித மாத்திரை மருந்துகளும் எடுத்துக்கொள்ளக் கூடாது. கர்ப்பக் காலத்தில் எக்ஸ்ரே எடுக்கக் கூடாது; அம்மைப் பாதிப்பு, வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்கள் வராமல் பாதுகாப்பதும் முக்கியம். 

கர்ப்பக் காலத்தின்போது தீவிர உடற்பயிற்சியினைத் தவிர்த்து கர்ப்பக் காலத்துக்கான பிரத்யேக(Antenatal) உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இது வயிற்றுப் பகுதிக்கு உறுதித்தன்மையைத் தருவதால், பிரசவம் எளிதாகும். ஆனாலும், மருத்துவரது ஆலோசனை இன்றி எந்தப் பயிற்சியையும் செய்யக் கூடாது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget