ஆரோகணம் படத்தைத் தொடர்ந்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள படம் நெருங்கி வா முத்தமிடாதே. இப்படத்தின் பிரஸ்மீட் நேற்று
(செப்டம்பர் 26) மாலை 4 மணி அளவில் சென்னையில் நடைபெற்றது.விழாவில், படநாயகன் சபீர், பியா, ஸ்ருதிஹரிஹரன், தம்பி ராமைய்யா, ஏ.எல்.அழகப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது லட்சுமி ராமகிருஷ்ணன் பேசுகையில், ஆரோகணம் படத்தை முதலில் குறும் படமாகத்தான் இயக்கினேன். ஆனால் அப்படத்தை தயாரித்த அனூப்தான் கமர்சியல் படமாக இயக்க சொன்னார். முதலில் அந்த படத்தை குறைந்த பட்ஜெட்டில் அதாவது 30 லட்சத்தில் எடுத்ததாக நான் ஓப்பனாக சொன்னதால், படத்தை குறைத்து மதிப்பிட்டனர். அதனால் இந்த படத்தை நன்றாக செலவு செய்து இயக்கியிருக்கிறேன்.
குறைந்த பட்ஜெட்டில் தரமான படம் எடுத்தால் இங்கு மரியாதை கிடைப்பதில்லை. பட்ஜெட் எகிறி நின்றால்தான் பெரிய படமாக நினைக்கிறார்கள். மேலும் ஆரோகணம் படத்துக்கு மீடியாக்கள் நல்ல விமர்சனம் கொடுத்தன. அந்த உற்சாகம்தான் உடனடியாக என்னை இந்த படத்தை இயக்கத் தூண்டியது.
மேலும், இந்த படத்தின் கதையை உருவாக்கும்போதே யாராவது பெரிய ஹீரோவை வைத்துதான் இயக்க நினைத்தேன். ஆனால், அவர்களிடம் கால்சீட் கேட்டு சென்றால் உடனடியாக தர மாட்டார்கள். நிறைய நாட்கள் வெயிட் பண்ண வேண்டியதிருக்கும். ஆனால் அவர்களுக்காக வெயிட் பண்ண எனக்கு பொறுமை இல்லை. அதனால்தான் புதுமுக ஹீரோவை வைத்து உடனடியாக படவேலைகளை தொடங்கினேன். 75 நாட்களில் படப்பிடிப்பை முடிப்பதாக சொல்லி 65 நாட்களில் முடித்து விட்டேன்.
இந்த படத்தில் நான்கு கதை, ஒரு க்ரைம், செண்டிமென்ட் என ஒரு கலவையாக இயக்கியிருக்கிறேன். ஹீரோவாக புதுமுக நடிகர் சபீர் நடித்தபோதும் ஒரு லாரிதான் இந்த படத்தின் முதல் ஹீரோ. மேலும், பியா இந்த படத்தில் இதுவரையில்லாத அளவுக்கு வித்தியாசமான பர்பாமென்ஸ் கொடுத்துள்ளார். அதேபோல் தம்பி ராமைய்யாவிடமும் 6 நாட்கள் கால்சீட் கேட்டு பிழிந்து எடுத்து விட்டோம். இந்த படத்தின் டைட்டீலை பார்க்கும்போது ரொமான்ஸ்சாக தெரியும். ஆனால் லாரியை மையமாகக்கொண்ட கதை என்பதால் லாரிகளின் பின்னால் போட்டிருக்கும் வாசகமான நெருங்கிவா முத்தமிடாதே என்பதைத்தான் டைட்டீலாக வைத்தேன். அந்த வகையில், இந்த படத்தை ஒரு குவாலிட்டியான கமர்சியல் படமாக இயக்கியிருக்கிறேன் என்கிறார் லட்சுமிராமகிருஷ்ணன்.

கருத்துரையிடுக