ஐஸ்வர்யா ராய் போன்றே, திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகை கரீனா கபூர். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான சிங்கம்
ரிட்டர்ன்ஸ் படம் ஹிட்டானது. தொடர்ந்து தனது கணவர் சைப் அலிகான் உடன் ''ஹேப்பி எண்டிங்'', சஞ்சய் லீலா பன்சாலியின், ''கப்பார்'' சல்மான் கான் உடன் ஒருபடம் என பிஸியாக நடித்து வருகிறார். சமீபகாலமாக ஹீரோயின் சம்பந்தப்பட்ட கதைகள் அதிகளவில் வெளியாகி வெற்றி பெற்று வருகின்றன. உதாரணமாக ப்ரியங்கா சோப்ராவின், ''மேரி கோம்'', கங்கனா ரணாவத்தின், ''குயின்'', ஆலியாபட்டின், ''ஹைவே'', ராணி முகர்ஜியின், ''மர்தானி'' போன்ற படங்கள் வெளியாகி ஹிட் படங்களாக அமைந்தன.
இந்நிலையில் முன்னணி நடிகைகள் பலரும் ஹீரோயின் சப்ஜெக்ட்டில் நடித்து வரும் வேளையில், கரீனா கபூர் ஏன் இதுபோன்று நடிப்பதில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுப்பற்றி அவரிடம் கேட்டால், இப்படி கூறுகிறார்... நானும் இதுப்போன்று படங்களில் நடித்துள்ளேன். உதாரணமாக ஜாமலி, ஜப் வீ மெட், ஹீரோயின் போன்ற படங்களில் நடித்துள்ளேன். ஆக கதைப்பிடித்து இருந்தால் நானும் அதுபோன்று நடிப்பேன், எல்லோரும் நடிக்கிறார்கள் என்பதற்காக நான் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

கருத்துரையிடுக