இணையதளத்தை பாதுகாப்பாக உபயோகிப்பது எப்படி

தற்போது இணைய குற்றம்(சைபர் கிரைம்) இளைஞர்களிடையே ஒரு பெரிய பிரச்சனையாக உருவாகியுள்ளது. இணையதளத்தில் கொடுக்கும்
ஒருவருடைய தகவல்களை சிலர் பார்த்து அதை தவறாக பயன்படுத்தி பல குற்றங்களை செய்கின்றனர். 

இதில் அதிகளவு பெண்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். இணைய குற்றத்தை எப்படி தடுக்கலாம்? எப்படி இணையதளத்தை பாதுகாப்பாக கையாளுவது? ஆகியவைகளை பற்றி பார்க்கலாம். 

உங்களுடைய கடவுச்சொற்களை(Passwords)  பாதுகாப்பான முறையில் அமைத்தல் வேண்டும். இந்த கடவுசொல் உங்கள் ஒருவரை தவிற மற்ற யாருக்கும் தெரியாத வகையில் பார்த்து கொள்ள வேண்டும். 

வெவ்வேறு கணக்குகளுக்கு வெவ்வேறு கடவுச்சொல்லை பயன்படுத்த வேண்டும். உங்களுடைய கடவுசொல் ஒரு வழக்கமான அடிப்படையில் இல்லாமல் ஒரு சிக்கலான முறையில் அதாவது எழுத்துக்கள், எண்கள், சிறப்பு எழுத்துக்கள் பயன்படுத்தி உருவாக்க வேண்டும். 

சமூக இணையத்தில் (பேஸ்புக், ட்விட்டர்) சுயவிவரங்களை கொடுக்கிறோம். எனவே பாதுகாப்பு அமைப்புகளை (security settings) சரிபார்க்கவும். நீங்கள் ஆன்லைனில் தகவலை பதிவு செய்யும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அது இணையத்தில் பதிவாகி எப்பொழுதும் இருக்கும்.

உங்களுடை பெயர், முகவரி, தொலைபேசி எண் அல்லது நிதி தகவல் போன்ற தனிப்பட்ட தகவல்களை கொடுக்கும் போது அந்த வலைத்தளம் பாதுகாப்பானாதா என்பதை உறுதிபடுத்தி கொள்ளுங்கள். உதாரணமாக ஆன்லைன் மூலம் பொருள் வாங்கும் பொழுது கவனமாக தகவல்களை கொடுக்க வேண்டும். 

உங்களுக்கு தேவையான விவரங்களை பதிவிறக்கம்(download) செய்யும் போது கவனமாக செய்ய வேண்டும். நம்பகமான இணைய தளங்களில் இருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்ய வேண்டும்.. 

இது போன்ற முறைகளை பின்பற்றினால் இணைய குற்றத்தை தடுக்கலாம்.    
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget