மம்மி நடிகையாகும் துளசி

தமிழ் சினிமாவில் அம்மா என்றால் அது சரண்யாதான். நாயகன் படத்தில் கமலுக்கு ஜோடியாக அறிமுகமானவர். அவருக்கும்,
ரஜினிக்கும் மட்டும்தான் அம்மாவாக நடிக்க வில்லை. மற்றபடி கிட்டத்தட்ட எல்லோருக்கும் அம்மாவாக நடித்து விட்டார். தென்மேற்கு பருவக்காற்று படத்தில் தேசிய விருதும் வாங்கிவிட்டார்.





இப்போது சரண்யாவின் அம்மா முகம் ரசிகர்களுக்கு கொஞ்சம் சலிப்பு தட்ட ஆரம்பிக்கவே அதை பயன்படுத்திக் கொண்டு துளிசி களம் இறங்குகிறார். சகலகலாவல்லவன் படத்தில் கமலின் தங்கையாக நடித்த துளசி பின்னர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்தார். தெலுங்கு, கன்னடத்தில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். கன்னட இயக்குனர் சிவமணியை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கியவர் 'ஈசன்' படத்தின் மூலம் ரீ எண்ட்ரி ஆனார்.

அதன் பிறகு பிசியான அம்மா நடிகையாகிவிட்டார், பண்ணையாரும் பத்மினியும், ஆதலால் காதல் செய்வீர், பாண்டியநாடு படங்கள் அவர் நடித்தவற்றில் முக்கியமானவை. தற்போது சாகசம், ஆம்பள, ஜீரோ, உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். சரண்யா கால்ஷீட் கிடைக்காதவர்கள், சரண்யா வேண்டாம் என்று நினைக்கிறவர்கள் துளசியை தேடிச் செல்கிறார்கள்.

"தமிழ் ரசிகர்கள் என்னை மறக்காமல் எனது ரீ எண்ட்ரியை சிறப்பாக்கி தந்திருக்கிறார்கள். அம்மா வேடம் என்றில்லை எந்த விதமான கேரக்டர் ரோலாக இருந்தாலும் நடிப்பேன். பண்ணையாரும் பத்மினியும், ஆதலால் காதல் செய்வீர் படமும் என்னால் மறக்க முடியாத படங்களாக அமைந்து விட்டது" என்கிறார் துளசி.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget