பெண் குழந்தைக்கு தாயானா மந்த்ரா

லவ் டூடே படத்தின் மூலம் அறிமுகமானவர் மந்த்ரா. பெரிய இடத்து மாப்பிள்ளை, கங்கா கவுரி, ப்ரியம், சிம்மாசனம், தேடினேன் வந்தது உள்பட
பல படங்களில் நடித்தவர் மந்த்ரா. தற்போது ஒன்பதுல குரு படத்தின் மூலம் ரீ என்ட்ரியாகி வாலு படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் ராசி என்ற பெயரில் நிறைய படங்களில் நடித்துள்ளார்.

பத்து வருடத்திற்கு முன்பு தெலுங்கு இயக்குனர் சீனிவாசை திருமணம் செய்து கொண்டார். தற்போது ஐதாராபத்தில் வசித்து வரும் மந்த்ரா பத்து வருடங்களுக்கு பிறகு அம்மாவாகி உள்ளார். அழகான பெண் குழந்தையொன்றை பெற்றிருக்கிறார்.

"எனது நீண்டநாள் பிரார்த்தனைக்கு பலன் கிடைத்துள்ளது. எங்கள் வீட்டுக்கு ஒரு தேவதை வந்திருக்கிறாள். நானும் என் கணவரும் பெண் குழந்தையை விரும்பினோம். கடவுள் அப்படியே கொடுத்திருக்கிறார்" என்கிறார் மந்த்ரா.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget