தீபாவளி ஹிட்டும் நடிகர்களின் துட்டும்

தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரையில் பண்டிகை நாட்களில் வெளிவரும் படங்களுக்கு எப்போதுமே ஒரு தனி கவனம் கிடைக்கும். வருடப்
பிறப்பு, பொங்கல் ஆகிய நாட்களை விட தீபாவளிக்கு வரும் திரைப்படங்கள் என்றாலே ஒரு கொண்டாட்டமாகவே இருக்கும். தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் எத்தனை படங்கள் வெளிவந்தாலும் மூன்றே மூன்று படங்கள் மீதுதான் திரையுலகத்தின் எதிர்பார்ப்பும் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகமாக அமைந்துள்ளது.ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் 'ஐ', ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா மற்றும் பலர் நடிக்கும் 'கத்தி', ஹரி இயக்கத்தில் விஷால், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிக்கும் 'பூஜை' ஆகிய படங்களுக்கு இடையேதான் பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. மூன்று இயக்குனர்களுமே கமர்ஷியல் இயக்குனர்கள் என்று பெயரெடுத்தவர்கள், இதற்கு முன் பல வெற்றிகளைக் குவித்தவர்கள். இவர்களது படங்களின் வசூலைப் பற்றி சொல்லவே தேவையில்லை. இந்த நிலையில் இந்த மூன்று படங்களுக்கும் தியேட்டர்கள் கிடைப்பதிலும், எது அதிகமான வசூலைக் குவிக்கும் என்ற எதிர்பார்ப்பிலும் பலத்த போட்டி உருவாகியுள்ளது. விக்ரமிற்கு கடைசியாக வெளிவந்த சில படங்கள் வசூல் ரீதியாக சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை. விஜய் நடித்து கடைசியாக வெளிவந்த 'தலைவா' படம் பற்றி அனைவருக்குமே தெரியும். விஷால் நடித்து கடைசியாக வந்த 'நான் சிகப்பு மனிதன்' படமும் பெரிய அளவில் வசூலாகவில்லை. ஆக, இவர்கள் மூவருமே அடுத்த படத்தில் அதிகபட்ச வசூலைக் குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழின் மிகச் சிறந்த கமர்ஷியல் இயக்குனர் படங்களில்தான் நடித்துள்ளனர். இந்த கமர்ஷியல் இயக்குனர்கள் - ஹீரோக்கள் கூட்டணியில் எந்தக் கூட்டணி தீபாவளி ரேஸில் முதலிடத்தைப் பிடிக்கப் போகிறது என்பதற்கு நாம் இன்னும் ஒரு மாதம் காத்திருக்க வேண்டும். இந்த மூன்று படங்களின் நாயகர்களுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. அதாவது மூன்று பேரின் முதலெழுத்தும் 'வி'யில் ஆரம்பமாகிறது. 'வி' ஃபார் விக்டரி' என்று சொல்வார்கள். அந்த 'விக்டரி'யில் விஜய், விக்ரம், விஷால் ஆகிய மூவரில் முந்தப் போவது யார்...?
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget