ஜோதிடத்தில் குழந்தை பாக்கியம்

எம்மிடம் ஒரு நாளைக்கு ஜாதகம் பார்க்க வரும் ஜாதகர்களில் கிட்டத்தட்ட பாதிக்கும்மேல் குழந்தை பாக்கியம் இல்லாமல் அது சம்பந்தமாய் கலங்கிய
முகங்களுடன் வருபவர்களே அதிகம்..அதிலும் கருசிதைவு , கரு உண்டாகாமல் போகுதல் , குழந்தை பிறந்தவுடன் இறப்பது என பல வகை..எவ்வளவு புகழ் சொத்து இருந்தாலும் பிள்ளைபேறு இல்லையேல் அந்த தம்பதியினருக்கு சமுதாயத்தில் தினம் தினம் நெருப்புகுளியல் தான்.

இதை ஜாதக ரீதியாக பார்க்கும்போது ஐந்தாம் இடத்தை பாவ கிரகங்கள் பார்ப்பது , ஐந்தாம் இடத்தில் பாப கிரகங்கள் இருப்பது , பாப கிரகங்கள் சேர்க்கை , பாப கிரகங்களின் தசா புக்தி என பெரும்பாலான ஜாதகங்கள் இதே அமைப்புடன் இருக்கின்றன..இதையும் தாண்டி பல அமைப்புகள் இருந்தாலும் பெரும்பாலனவை இது போன்ற அமைப்பில் இருக்கின்றன..இது போன்ற நிலைகளில் எளிய பரிகாரமாய் அரச மரத்திடம் சரண் அடையலாம்..

காலை நேர அரச மரத்தின் காற்று , அரசமர இலை ஸ்பரிசம் , அதன் நிழலில் இளைப்பாறுவது போன்றவை கண்டிப்பாய் உடலில் ஒரு உத்வேகத்தை உண்டாக்கி கருகலையாமல் முழுஉருவமாக்கி குழந்தையாய் , நமது வாரிசை தருகிறது..இது நடைமுறை அனுபவ உண்மையும் கூட..மேலும் அம்மன் [ எந்த அம்மனாக இருந்தாலும் ] வழிபாடும் கருகலைவதை தவிர்க்கும்..மேற்கொண்ட முறைகள் மூலம் பல தம்பதிகள் பயனடைந்துள்ளனர் என்பது கண்கூடான உண்மை
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget