சாருலதா படத்திற்கு பிறகு தமிழ் சினிமா ப்ரியாமணியை சுத்தமாக கைகழுவி விட்டது. அதனால் தற்போது மலையாளம், தெலுங்கு,
கன்னட சினிமாவில் தஞ்சமடைந்துள்ள ப்ரியாமணி, ஆரம்பத்தில் படுகவர்ச்சியாக நடித்து வந்தவர் தற்போது ஆக்சன் நடிகையாகவும் உருவெடுத்து நிற்கிறார். அதற்காக தனது உடல் எடையையும் கணிசமான அளவு குறைத்திருக்கிறார்.
இதில் மலையாளத்தில் ஜெயராமுடன் எங்களுட வீட்டிலே அதிதிகள் என்ற படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஹீரோயின் வேடத்தில் நடித்து வரும் ப்ரியாமணி, கன்னடத்தில் வியூகம் என்றொரு படத்தில் சிபிஐ அதிகாரியாக நடிக்கிறார். அரசியல் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜயசாந்தி கெட்டப்பில் தோன்றும் ப்ரியாமணி, சண்டை காட்சிகளிலும் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறாராம்.
ஏற்கனவே ஒரு தெலுங்கு படத்தில் போலீசாக நடித்தபோது முறையான சண்டை பயிற்சிகளை எடுத்திருந்த ப்ரியாமணி, இந்த படத்தில் அதைவிட அதிரடியான சண்டை காட்சிகளிலும் நடிக்கிறாராம். மேலும், மலையாளம், தெலுங்கில் ப்ரியாமணிக்கு ஓரளவு மார்க்கெட்டில் இருப்பதால் இப்படத்தை அந்த மொழிகளிலும் டப் செய்து வெளியிடுகிறார்களாம்.
இப்படி கிளாமர் கதாநாயகியில் இருந்து ஆக்சனுக்கு தாவி விட்ட ப்ரியாமணி, இனிமேல் வில்லத்தனமான நெகடீவ் ரோல்கள் கிடைத்தாலும் தாராளமாக நடிப்பாராம்.

கருத்துரையிடுக
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.