விண்டோஸ் இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டரை மவுஸ் இல்லாமல், டச் பேட் அல்லது மற்ற பாய்ண்ட் சாதனம் எதுவுமின்றி இயக்க முடியுமா?
முடியாது. அப்படியானால், லேப்டாப் கம்ப்யூட்டர் ஒன்றில், அதன் டச் பேட் இயங்காமல் போனால், என்ன செய்வது? இந்த பிரச்னை இருந்தால், கம்ப்யூட்டரை இயக்குவது என்பது பகீரதப் பிரயத்தனம் செய்வது போல் ஆகும். எனவே, பிரச்னைக்குத் தீர்வு காண முயல வேண்டும். என்ன செய்யலாம்?
முதல் முயற்சியாக, கம்ப்யூட்டரை ரீ பூட் செய்திடவும். அப்போதும் டச் பேட் செயல்படவில்லை என்றால், கீழ்க்காணும் முயற்சிகளை மேற்கொள்ளவும்.
சில வேளைகளில், நாம் நம்மை அறியாமலேயே, டச் பேடின் இயக்கத்தினை நிறுத்தி இருப்போம். ஒவ்வொரு லேப் டாப்பிலும், டச் பேடின் இயக்கத்தை நிறுத்தி வைத்திட, பங்சன் கீ இணைப்பில் ஒரு ஷார்ட்கட் கீ இருக்கலாம். சில கம்ப்யூட்டர்களின் பங்சன் கீகளில் அவை எந்த வகை செயல்பாட்டிற்கென சிறிய ஐகான் ஒன்று கீ அருகே காட்டப்பட்டிருக்கும். இவற்றின் மூலம் டச் பேடிற்கான கீயை அறிந்து, டச்பேட் இயக்கத்தினைச் சரி செய்திட முயற்சிக்கவும்.
இன்னும் சரியாகவில்லை என்றால், touchpad settings என்ற பிரிவினைக் காண வேண்டும். ஸ்டார்ட் மெனு செல்லவும். அங்கு mouse settings டைப் செய்திடவும். Change mouse settings என்ற பிரிவில் டச் பேடிற்கான அமைப்பும் இருக்கலாம். இல்லை என்றாலும், அங்கு தரப்பட்டுள்ள அனைத்து இயக்கத்தினையும் இயக்கநிலையில் வைக்கும் வழியாக, அனைத்திற்கும் டிக் அடையாளம் அமைக்கவும். அல்லது ரேடியோ பட்டன் இருந்தால், அவற்றை ஆன் செய்து வைக்கவும்.
இவற்றுக்கும் சரிப்படவில்லை எனில், உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டரில், ஹார்ட்வேர் பிரச்னை தான் இருக்கும். லேப்டாப் கம்ப்யூட்டரை அதன் பிரச்னைகளைச் சரி செய்திடும் டெக்னீஷியனிடம் அனுப்பி, ஹார்ட்வேர் பிரச்னையைச் சரி செய்திடக் கொடுக்கவும்.

கருத்துரையிடுக