எனக்கு பிகினியா - பரினிதி சோப்ரா

ஹிந்தித் திரையுலகில் அதிகமாகப் பேசப்பட்டு வரும் நடிகைகளில் பரினிதி சோப்ராவும் ஒருவர். 'மேரி கோம்' புகழ் பிரியங்கா சோப்ராவின்
உறவினரான பரினிதி சோப்ரா ஹிந்தியில் புகழ் பெற்ற யாஷ் ராஜ் நிறுவனத்தில் மக்கள் தொடர்பு ஆலோசகராகப் பணியாற்றியவர். அதன் பின் 2011ம் ஆண்டில் வெளிவந்த 'லேடீஸ் வெர்சஸ் ரிக்கி பால்' படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். தற்போது 'தவாத் இ இஷ்க், கில் தில்” ஆகிய படங்களில் நடித்து வருகிறார் பரினிதி சோப்ரா.

ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் அவருடைய அழகான தோற்றத்தால் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ள ஒரு நடிகையாக விளங்குகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் 'பிகினி' உடை அணிந்து நடிப்பதைப் பற்றிய அவருடைய கருத்தைத் தெரிவித்துள்ளார்.

“என்னுடைய தற்போதைய தோற்றம் பிகினி உடை அணிந்து நடிப்பதற்குப் பொருத்தமாக இருக்காது. அடுத்த படங்களிலும் அப்படி நடிக்க முயற்சி எடுக்க மாட்டேன். என்னுடைய எடையைக் குறைத்த பின், ஒரு படத்தில், கதைக்கேற்றபடி அப்படி ஒரு காட்சி தேவைப்பட்டால் மட்டுமே அப்படி நடிக்க சம்மதிப்பேன்,” என்று கூறியுள்ளார்.

தமிழிலும் இவர் நடிக்க வருகிறார் என்று சில சமயம் செய்திகள் வந்துள்ளன, ஆனால் இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை. ஒருவேளை வரும் காலத்தில் நடந்தாலும் நடக்கலாம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget