கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்தின் மூலம் அறிமுகமானவர் ஸவேதாராவ். அதன் பிறகு சில படங்களில் நடித்தார். நான்தான் பாலா படத்தில்
ஹீரோயினாக நடித்தார். பட்டைய கிளப்பணும் பாண்டியா படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தார். சினிமாவில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்.
சரிகம இண்டியா நிறுவனம் தயாரிக்கும் சந்திரலேகா என்ற புதிய சீரியலில் சந்திரா என்ற டைட்டில் ரோலில் நடிக்கிறார் லேகா என்ற கேரக்டரில் நாகஸ்ரீ நடிக்கிறார். இருவேறு குணங்கள் கொண்ட சந்திரா, லேகா என்ற பெண்கள் ஒரு புள்ளியில் சந்திக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை பயணம் எப்படி இருக்கிறது என்பதுதான் சந்திரலேகாவின் கதை. மீனாகுமாரி, புவனேஸ்வரி, சுரேகா, ரிஷி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். நிமேஷ் இயக்குகிறார்.
"நான் நடிகை. நடிக்க எந்த வாய்ப்பு கிடைத்தாலும் நடிப்பேன். சின்னத்திரை, பெரிய திரை என்று பிரித்து பார்ப்பது இல்லை. சின்னத்திரையில் நடித்தாலும் சினிமாவில் நல்ல வாய்ப்பு வரும்போது அதிலும் நடிப்பேன்" என்கிறார் ஸ்வேதா ராவ்.

கருத்துரையிடுக