கும்பகோணம் பகுதியில் சரத்குமார் 2 வேடங்களில் நடிக்கும் சண்டமாருதம் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் சண்டைக்காட்சிகள்
நேற்று படமாக்கப்பட்டன. மேஜிக் பிரேம் நிறுவனம் சார்பில் சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் தயாரிக்கும் சண்டமாருதம் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு கும்பகோணத்தில் தொடங்கியது.
தொடர்ந்து கும்பகோணம் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இயக்குனர் வெங்கடேஷ் இயக்கும் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக சரத்குமார், கதாநாயகிகளாக ஓவியா, மீராநந்தன் மற்றும் கன்னட நடிகர் அருண்சாகர் நடிக்கின்றனர்.
கும்பகோணத்தை அடுத்த மாத்தி ரெயில்வே கேட் அருகே உள்ள ஒரு மண்டபத்தில் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டன. படப்பிடிப்பின் போது சரத்குமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
மகாபிரபு, சாணக்கியா, ஏய் உள்பட பல்வேறு வெற்றி படங்களை இயக்கிய வெங்கடேஷ் இந்த படத்தையும் இயக்குகிறார். இப்படத்தில் கதாநாயகன், வில்லன் என இரட்டை கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். கதாநாயகிகளாக மீராநந்தன், ஓவியா ஆகியோர் நடிக்கின்றனர். இது நான் நடிக்கும் 136வது படம் ஆகும்.
சண்டமாருதத்தின் படப்பிடிப்பு சென்னை, மதுரை, புதுச்சேரி, பெங்களூர், பொள்ளாச்சி உள்பட பல்வேறு பகுதிகளில் படமாக்கப்பட்டன. தற்போது கும்பகோணத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு நானே கதை எழுதியதோடு மட்டுமின்றி ஒரு பாடலும் பாடி உள்ளேன். படத்தின் முக்கிய கதை களமாக கும்பகோணம் திகழ்வதால் கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இப்படத்தில் அருண்சாகர், தினேஷ், ராதாரவி, தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, சமுத்திரகனி, சிங்கம் புலி, ஜி.எம்.குமார், வின்சென்ட் அசோகன், வெண்ணிற ஆடை மூர்த்தி, கானா உலகநாதன், டெல்லி கணேஷ், நளினி, சந்தான பாரதி, ஜார்ஜ், கராத்தே ராஜா, பாபூஸ், ஆதவன், செல்வராஜ், பார்பிரெண்டா, மோகன்ராமன், நரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தில் முதன் முதலில் எனது அண்ணன் சுதர்சனின் மகன் ராம்குமார் நடிக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகை ஓவியா கூறியதாவது: தமிழில் இது எனக்கு 8வது படமாகும். இதுவரை இளம் கதாநாயகர்களுடன் நடித்து வந்த நான் முதன்முதலில் நல்ல அனுபவம் வாய்ந்த சரத்குமாருடன் நடிக்க போகிறேன் என்பதை நினைக்கும் போது சற்று பயமாக தான் இருந்தது. ஆனால் அவர் அனைவரிடமும் சகஜமாக பழகுவதை பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்த படத்தில் நடிக்கிறேன்.
எனக்கு பிடித்த நடிகை நயன்தாரா. அதேபோல இயக்குனர் சங்கரின் படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். கவர்ச்சியாக நடிப்பதில் தவறு இல்லை. கதைக்கு தேவை என்றால் கவர்ச்சியாக நடிக்கலாம்.
இவ்வாறு ஓவியா கூறினார்.
இயக்குனர் வெங்கடேஷ் கூறியதாவது: சண்டமாருதம் எனக்கு 23–வது படமாகும். க்ரைம் நாவலாசிரியர் ராஜேஷ்குமார் முதல் முறையாக இந்த படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார். கூடுதல் திரைக்கதை வசனத்தை நான் எழுதியுள்ளேன். இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நாளை மறுநாள் (சனிக்கிழமை) வரை கும்பகோணத்தில் நடைபெறுகிறது. படத்தில் 6 சண்டைக்காட்சிகளும், 4 பாடல் காட்சிகளும் இடம் பெறுகிறது. இந்த படம் நவம்பர் மாதம் வெளிவரும். தொடர்ந்து 12 வருடமாக நடித்தும் வருகிறேன். இதுவரை 32 படங்களில் வில்லன், காமெடி உள்பட பல்வேறு வேடங்களில் நடித்துள்ளேன்.
சரத்குமாருடன் நான் நடிக்கும் முதல் படம் இதுவாகும். இதை நினைக்கும் போது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது.

கருத்துரையிடுக