குப்சூரத் சினிமா விமர்சனம்

நடிகர் : பாவத் அப்சல் கான்
நடிகை : சோனம் கபூர்
இயக்குனர் : சஸான்கா கோஷ்


ஐ.பி.எல்., கிரிக்கெட் கோல்ககட்டா நைட் ரைடர்ஸ் அணியில் பணி புரிபவர் டாக்டர் மிலி சக்ரவர்த்தி(சோனம் கபூர்). பிஸியோதெரபிஸ்டான இவர், கோல்கட்டா அணி அளித்த பணியின் காரணமாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ராஜஸ்தானின் சம்பல்கர் ராஜாவிற்கு சிகிச்சை அளிப்பதற்காக செல்கிறார். டில்லியில் வளர்ந்த மிகவும் ஜாலியான பெண்ணான மிலி, கட்டுப்பாடுகள் நிறைந்த ராஜாவின் அரண்மனைக்கு செல்கிறாள். அங்கு அவள் சந்திக்கும் அனுபவங்களை நகைச்சுவை கலந்து கூறி இருக்கும் படம் தான் குர்சூரத் படத்தின் கதை. அந்த அரண்மனையில் சக்கர நாற்காலியில் எப்போதும் குடித்துக் கொண்டிருக்கும் வயதான தாத்தாவாக ஷேகர் , ஹிட்லரை போன்று ஸ்டிட்டான நிர்மலா தேவி அம்மா (ரத்னா பதக்), ஆன்ட்ராய்டில் எப்போதும் தொழிலில் பிஸியாக விக்ரம் ரதோர் (பவத் கான்) ஆகியோரை மிலி சந்திக்கிறாள்.

1980ம் ஆண்டு வெளியான கூப்சூரத் படத்தை அதே பெயரில், அதே சமயம் மாறிபட்ட கதை அமைப்பில் முழுக்க முழுக்க கமர்ஷியல் கலந்த திகில் படமாக இந்த கூப்சூரத் படத்தை எடுத்துள்ளனர். மாறுபட்ட கதையாக இருந்தாலும் கதை களம் இரண்டு கூப்சூரத்திற்கும் ஒன்று தான். படத்தில் வரும் கதாபாத்திரங்களும் அதே தான். படத்தில் வரும் கதாபாத்திரங்களுக்கு ஏற்பவே திரைக்கதையும் அமைக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் படத்தின் முதல் பாதி ஓகே. இரண்டாவது பாதியை மிகவும் கஷ்டப்பட்டே கொண்டு சென்றிருக்கிறார்கள் என்றே கூறலாம். மற்றபடி சோனம் கபூர், மிக அழகாக தனக்கு தரப்பட்ட கதாபாத்திரத்தை மிக நிறைவாக செய்துள்ளார். அதே சமயம் வசனங்களை பேசுவதற்கும், டாக்டர் கேரக்டரில் ரியலாக நடிப்பதற்கு ரொம்பவே மெனக்கெட்டிகிருக்கிறார் என்றே கூற வேண்டும். முந்தைய படங்களை விட நடிப்பில், சோனம் வெகுவாக தேறி இருக்கிறார். குறிப்பாக வசனம் பேசுவதில் அவரது நடித்து திறனை நன்கு வெளிப்பட்டிருக்கிறது. பழைய கூப்சூரத்தில் ரேகாவின் நடிப்புக்கு இணையாகவே சோனமும் போட்டி போட்டி நடித்துள்ளார்.

மற்றொரு புறம் பரித் கானும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ராஜ பரம்பரையைச் சேர்ந்தவர் என்பதை தோற்றத்தில் மிக எளிதாக வெளிக்காட்டி உள்ளார். அவரது பர்சனாலிட்டிக்கு தகுந்த போலவே இந்த கதாபாத்திரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் பரித்தின் கதாபாத்திரத்தை விட சோனமின் கதாபாத்திரத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

கண்டிப்பான அம்மாவாக நிர்மலாவை விட ரத்னா அதிக நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். மிலியுடனான பிரச்னைகளில் அவரது நடிப்பில் செயற்கை தன்மைஙய தெரிகிறது. ஷாஷாக் கோசின் டைரக்ஷன் பாராட்டும் படியாகவே உள்ளது. இருப்பினும் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது. எடிட்டிங்கில் மிகவும் கனத்தை கையாண்டுள்ளனர். குறிப்பிட்ட சில காட்சிகளில் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் மிக நேர்த்தியாக எடிட்டிங் செய்யப்பட்டுள்ளது.

ஸ்நேகா கன்வல்கர், பாட்ஷா மற்றும் அமல் மாலிக்கின் இசையில் பாடல்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. அதிகம் ரசிக்கும் படி இல்லாவிட்டாலும், காட்சிகளுக்கு ஏற்ற இடங்களில் பாடல்கள் இடம்பெற்றுள்ளது பாராட்டும் படியாக உள்ளது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget