'வல்லினம்' படத்தில் நாயகியாக அறிமுகமான பெங்களூரு பெண்ணான மிருதுளா, தற்போது 'திலகர்' படத்தில் நடித்து வருகிறார். பிரபல
இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் உருவாகி வரும் 'ஐஸ் க்ரீம் 2' படத்திலும் நடிக்கும் மிருதுளா, தெலுங்குக்காக நவீனா என்று பெயர் வைத்துக் கொண்டிருப்பது தெரிந்ததே. அந்தப் படத்தின் பல கிளாமரான ...இன்னும் சொல்லப் போனல், அதற்கும் மேல் ஆபாசமாகவும் சில புகைப்படங்கள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தின. அமைதியான பெண்ணாகத் தோற்றமளிப்பவர் இப்படி நடித்துள்ளாரே என்றும் குரல்கள் எழுந்தன.
ஆனால், தன்னை இயக்குனர் ராம்கோபால் வர்மா அப்படியெல்லாம் நடிக்க கட்டாயப்படுத்தவில்லை என்று கூறியிருக்கிறார். “அந்தக் குறிப்பிட்ட பாடல் எப்படி எடுக்கப்பட வேண்டும் என்பதைப் பற்றி என்னிடம் ஏற்கெனவே விளக்கிவிட்டார்கள். ராம் கோபால் ஒரு போதும் என்னை அப்படி வெளிப்படுத்திக் காட்ட வேண்டும் என்று நினைக்கவில்லை. அந்தப் பாடலில் நடிக்க நான் மிகவும் விரும்பினேன். ஏனென்றால், ஒரு தெலுங்குப் படத்தில் இடம் பெற்ற ஒரு ஆங்கிலப் பாடல் அது. ஏதாவது ஒரு தோற்றம் கண்ணாடி முன்னால் நின்று பார்க்கும் போது ஆபாசமாகத் தெரிந்தால், அதை நான் கண்டிப்பாக செய்ய மாட்டேன். அந்தப் பாடல் படுக்கையறை சம்பந்தமான பாடல்தான், ஆனால் கண்டிப்பாக கேவலமாக இருக்காது,” என்கிறார்.

கருத்துரையிடுக