தமிழ்சினிமாவில் பல விஷயங்கள் இப்போது ட்ரெண்டாகிவிட்டன. அவற்றில் ஒன்று..படத்தின் டிரெய்லருக்கு யு டியூப்பில் கிடைக்கும் ஹிட்ஸ்!
அதாவது யு டியூப்பில் வெளியிடப்பட்ட டிரெய்லரை எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள் என்ற புள்ள விவரத்தை வைத்து பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். டீஸர் அல்லது டிரெய்லரை 'யு டியூப்'பில் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு படத்திற்கும் முக்கிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை அஜித்தின் 'பில்லா 2' படத்தின் டீசர்தான் முதன்முதலாக ஒரே நாளில் 10 லட்சம் பார்வையாளர்களை பெற்றது. அதன் பிறகு விஜய் நடித்த 'தலைவா' படத்தின் டீஸரை அதற்கும் குறைவான நேரத்திற்குள் 10 லட்சம் ரசிகர்கள் கண்டுகளித்தனர் என்று சொல்லப்பட்டது. இந்தியாவின் முதல் மோஷன் கேப்சர் அனிமேஷன் படமான ரஜினியின் 'கோச்சடையான்' படத்தையும் ஒரே நாளில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டுகளித்தனர். சூர்யா நடித்த அஞ்சான் டீஸரை 12 லட்சம் பார்த்தாக சொல்லி சக்சர் மீட்டே வைத்தனர்.
இந்தப் படங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு, 12 மணி நேரத்திலேயே 'ஐ' படத்தின் டீஸர் சாதனை படைத்துள்ளது. ஐ படத்தின் டீஸரை இதுவரை 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்துள்ளனர். இந்த எண்ணிக்கை நிமடத்துக்கு நிமிடம் உயர்ந்து வருகிறது. எனவே ஒரு சில நாட்களில் இந்த எண்ணிக்கை பல மடங்கு உயர வாய்ப்பிருக்கிறது. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை இதுவரை ரஜினின் 'கோச்சடையான்' படத்தின் டீஸர் மட்டுமே 50 லட்சத்திற்கும் அதிகமான 'யு டியூப்' பார்வையாளர் எண்ணிக்கையைப் பெற்றுள்ளது.
இந்த சாதனையை 'ஐ' படத்தின் டீஸர் முறியடிக்கும் என்கிறார்கள் விக்ரம் ரசிகர்கள்.

கருத்துரையிடுக