கோலிவுட் குத்து பாட்டு நடிகை ரிஷா


ஏராளமான படங்களில் அயிட்டம் பாடல்களில் ஆடி வருபவர் ரிஷா. சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என்ற கனவுடன் வந்த இவர்,
எதிர்பாராதவிதமாக குத்துப்பாட்டு நடிகையாகி விட்டார். இவரது அம்மாவும் ஒரு காலத்தில் சினிமாவில் டான்சராக இருந்தவர்தானாம். ஆனால் அப்போது அவர் பெரிதாக ஒன்றும் சம்பாதிக்கவில்லையாம். ஆனால், ரிஷா அயிட்டம் பாடல்களுக்கு ஆடியே சென்னையில் சில இடங்களில் அசையா சொத்துக்களை வாங்கிப்போட்டு வருகிறார்.

அதோடு, தற்போது நதிகள் நனைவதில்லை, சோக்குசுந்தரம் என்ற இரண்டு படங்களில் இரண்டாவது கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். இதையடுத்து முதன்மை நாயகியாக நடிக்க வேண்டும் என்பதுதான் ரிஷாவின் அடுத்த நோக்கமாக உள்ளதாம். அதனால் சில டைரக்டர்களிடம் தன்னை கதாநாயகி ஆக்குமாறும் அன்பு வேண்டுகோள் விடுத்து வருகிறார் ரிஷா.

மேலும், பெரும்பாலும் தங்களது மகள்கள் ஸ்பாட்டில் நடித்துக் கொண்டிருந்தால் அவர்களின் தாய்குலங்கள் ஹோட்டல் அறையிலோ அல்லது மகள் கண்ணில் படாத இடத்திலோதான் அமர்ந்திருப்பார்கள். ஆனால் ரிஷாவின் அம்மாவோ, எந்நேரமும் மகள் அருகிலேயே இருக்கிறாராம். சில சமயங்களில் குத்துப்பாட்டுக்கு ரிஷா நடனமாடும் படப்பிடிப்பு இரவு முழுக்க நடந்தால், இவரும் விடிய விடிய தூங்காமலேயே கொட்ட கொட்ட விழித்துக்கொண்டிருக்கிறாராம்.

அதைப் பார்த்து, உங்கள் மகள் நடித்துக் கொண்டிருக்கிறார். அதனால் விழிக்க வேண்டிய கட்டாயம். ஆனால் நீங்கள் தூங்கச்செல்லலாமே என்று யாராவது கேட்டால், என் பார்வையிலேயே என் மகள் இருக்க வேண்டும். அவளை தனித்து விட்டு விட்டு ஹாயாக தூங்கச்செல்வது எனக்கு பிடிக்காது. அப்படி சென்றால் எனக்கு தூக்கமும் வராது என்கிறாராம் தாய்குலம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget