நடிகை ரோஜாவின் கையில் வெட்டிய மர்ம நபர்


ஆந்திர மாநிலத்தில் உள்ள நகரி தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வானவர் நடிகை ரோஜா. இந்த
தொகுதியில் உள்ள கங்கை அம்மன் கோயில் திருவிழா கடந்த ஒரு வாரமாக நடந்து வந்தது. இறுதி நாளன்று எம்எல்ஏ ரோஜா அந்த விழாவில் கலந்து கொண்டார். அப்போது 500 பெண்கள் சீரிவரிசை ஏந்தி வந்துள்ளனர். 

இதையடுத்து, எம்எல்ஏவான ரோஜாவுக்கு முதல் மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றபோது, காங்கிரஸ் மற்றும் தெலுங்குதேச கட்சியினர் கிராமத்து பெரியவருக்குத்தான் அந்த மரியாதையை அளிக்க வேண்டும் என்று தகராறு செய்துள்ளனர். இதனால் சிறிது நேரம் இருதரப்பினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதன்பிறகு ரோஜா பூசாரி கையில் தாம்பூல தட்டை கொடுத்தபோது சிலர் அதை தட்டி விட்டுள்ளனர். அந்த தள்ளுமுள்ளுவை பயன்படுத்தி யாரோ மர்மநபர் ரோஜாவின் கையில் கத்தியால் வெட்டியிருக்கிறார். இதனால் அவர் கையில் ரத்தம் கொட்ட, வலியால் துடித்திருக்கிறார் ரோஜா. இதனால் போலீசார் மீது அதிருப்தியடைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் ரோஜாவுடன் கொட்டும் மழையில் அமர்ந்து போராட்டம் செய்துள்ளனர்.
அதைத்தொடர்ந்து, எதிர்கட்சி கும்பலை விரட்டியடித்த போலீசார், ரோஜாவை சமாதானம் செய்து கோயிலுக்குள் அழைத்து சென்றுள்ளனர். அதோடு, அவருக்கு முதல்மரியாதை சிறப்புகள் அளித்து கெரளவப்படுத்தியுள்ளனர். அதன்பிறகே ரோஜாவும், அவரது கட்சியினரும் சகஜநிலைக்கு திரும்பினார்களாம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget