பேய் படத்தில் நடிக்கும் நயன்தாரா

நடிகர் சூர்யா, அவரது தம்பி கார்த்தி ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கும் பட நிறுவனம் - ஸ்டுடியோ க்ரீன். கே.இ.ஞானவேல்ராஜாவின்
நிர்வாகத்தில் செயல்பட்டு வரும் இப்படநிறுவனம் தற்போது முன்னணி படநிறுவனங்களில் ஒன்றாக இயங்கி வருகிறது. ஸ்டுடியோ க்ரீன் பட நிறுவனம் இதுவரை தயாரித்த அனைத்துப் படங்களிலும் சூர்யா அல்லது கார்த்தி மட்டுமே நடித்து வந்தனர். தற்போது கார்த்தி நடித்துள்ள மெட்ராஸ் படத்தைத் தயாரித்து விரைவில் அப்படத்தை வெளியிட உள்ளனர்.
இந்நிலையில், ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்கும் அடுத்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இப்படத்தில் நடிக்க அவருக்கு ஒன்றரை கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. இந்தப்படத்தில் கதாநாயகன் கிடையாது. நயன்தாராவுக்கு ஹீரோ ரேன்ஜுக்கு முக்கியத்துவம் உள்ள வேடம். அதாவது அருந்ததி படத்தில் அனுஷ்கா நடித்தது போன்ற வேடத்தில் நயன்தாரா நடிக்கிறார். இது ஒரு பேய்ப்படம். 2டி என்ற பெயரில் சூர்யா சொந்தப்பட நிறுவனத்தை தொடங்கிவிட்டதால், இனி மற்ற ஹீரோக்களை வைத்து படங்களை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறதாம் ஸ்டுடியோ க்ரீன்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget