முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க வேண்டுமா

1. காலையில் எழுந்ததும் நான்கு தக்காளி, நான்கு மிளகு, ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து அடித்து கலந்து குடியுங்கள். இது உடலின் நச்சுப் பொருட்களை
வெளியேற்றி சுத்தம் செய்கிறது. 

இதன் மீதியை முகத்தில் தேய்த்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் தோலின் துவாரங்கள் இறுகி கூடவே முகம் பளபளப்பாகவும் மாறும். நிறைய தண்ணீர் குடித்தால் நச்சுப்பொருட்கள் உடலில் இருந்து வெளியேறும். 

2. முகத்திற்கான அழகு சாதனப் பொருட்களை வாங்கும்பொழுது அதில் கிளைகாலிக் அமிலம், ரெட்டினாயிக் அமிலம் இருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள். இவை ஆயில் அதிகமாக உருவாவதை தடுக்கக் கூடியவை. 

உங்கள் கிளன்ஸர்களை வாங்கும்பொழுது அதனுள் ஹைட்ராக்ஸி அமிலம், சாலிசிலிக் அமிலம், பென்ஸைல் பெராக்ஸைட் போன்றவை இருக்கிறதா என்று கவனியுங்கள். டோனர்கள் வாங்கும்போது அதில் ஆல்கஹால் இருப்பதைத் தவிருங்கள். இவை முகத்தில் இருக்கிற மொத்த ஆயிலையும் நீக்கி சருமத்தை வறட்சி அடையச்செய்து சுருக்கம் ஏற்பட வழி ஏற்படுத்தும். 

3. நார்ச்சத்து மிகுந்த உணவுகள், காய்கறிகள், பழங்கள், முட்டைக்கோஸ், கேரட் போன்றவற்றை தினமும் சாப்பிடுங்கள். முகத்தில் பருக்களே வராமல் இருக்க ஒவ்வொரு மாதமும் ஒரு வாரத்திற்கு பச்சைக் காய்கறிகள், வேகவைத்த காய்கறிகளை எடுத்துக்கொள்ளுங்கள். 

4. வெதுவெதுப்பான தண்ணீரால் தினமும் மூன்று முறையாவது முகத்தை கழுவுங்கள். இதனால் அதிகப்படியான ஆயில் நீக்கப்படும். முகம் கழுவும்போது தேய்க்காதீர்கள்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget