ஐ படத்தில் பாடிய கனடா பாடகி


ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையில் கபிலன், கார்க்கி பாடல்கள் எழுதியுள்ள 'ஐ' படத்தின் இசை வெளியீடு சென்னையில் நாளை
பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இன்றைய இளம் ரசிகர்களின் கவனத்தை இந்தப் படம் கடந்த சில தினங்களாக அதிகமாக ஈர்த்து வருகிறது. புதுப் புது பாடகர்கள், பாடகிகளை அறிமுகப்படுத்தி அவர்களை ஒரே பாடலில் உச்சத்திற்கு கொண்டு வந்துவிடும் ரகுமான் இசையில் கனடா நாட்டைச் சேர்ந்த நடாலி டி லுசியா என்ற பாடகி ஒருவர் 'ஐ' படம் மூலம் தமிழுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.கனடாவில் பிறந்து வளர்ந்த நடாலி தனது 6 வயதில் இசையை முறைப்படி கற்றுக் கொண்டவராம். டெரோன்டோவில் உள்ள கார்டினல் கார்டர் ஆர்ட்ஸ் அகாடமி மற்றும் மான்ட்ரீலில் உள்ள மெக்கில் பல்கலைக்கழகத்திலும் இசையைப் பயின்றவர். 2009ம் ஆண்டு ஃபியூஷன் ஆல்பம் ஒன்றில் பணியாற்றுவதற்காக இந்தியா வந்துள்ளார். 2010ல் அவருடைய இசைத் திறமையைப் பற்றிய வீடியோ ஒன்றை யு டியூப்பில் பதிவேற்றியிருக்கிறார். உலகம் முழுவதும் லட்சக் கணக்கானோர் அந்த வீடியோவைப் பார்த்து ரசித்துள்ளனர். அதன் மூலம் இந்தியாவிலும் புகழ் பெற்று சில இசை சம்பந்தப்பட்ட வேலைகளில் பணியாற்ற அவருக்கு அழைப்பு வந்திருக்கிறது.ஏ.ஆர். ரகுமானால் நடாலியின் திறமை கவனிக்கப்பட்டு அவர் நடத்திய உலக இசைச் சுற்றுலாவிலும் நடாலி கலந்து கொண்டிருக்கிறார். பின்னர் ஹிந்தித் திரையுலகிலும் அவருக்கு பாட வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில் ரெடி ஸ்டெடி போ..., பாடல் மூலம் திரையுலகிலும் புகழ் பெற ஆரம்பித்தார். 'கடல்' படத்தில் பின்னணி இசையில் உள்ள பாடல்களையும் பாடியிருக்கிறார். தற்போது 'ஐ' படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் கார்க்கி எழுதியுள்ள 'ஐலா...ஐலா...' என்ற பாடலை ஆதித்ய ராவுடன் இணைந்து பாடியிருக்கிறார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget