தீபாவளி ரேசில் முன்னணி நாயகர்கள்

கடந்த மாதம் வரை விஜய்யின் கத்தி, விஷாலின் பூஜை ஆகிய படங்கள்தான் தீபாவளிக்கு வெளியாவது உறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனால்,
சற்றும் எதிர்பார்க்காத வகையில் திடீரென்று தீபாவளி ரேஸில் ஷங்கரின் ஐ படமும் சேர்ந்து கொண்டதால், தீபாவளி பரபரப்பு இப்போதே களைகட்டத் தொடங்கி விட்டது.

இந்நிலையில், ஐ படத்தின் பிரமாண்டத்திற்கு நடுவே விஷாலின் பூஜை ஒருவேளை பின்வாங்கலாம் என்று கோலிவுட்டில் டாக் எழுந்தது. ஆனால், பூஜை போடும்போதே தீபாவளி வெளியீடு என்று சொல்லியே படத்தை ஆரம்பித்த விஷால், சமீபத்தில் அப்படத்தின் டீசரை வெளியிட்டவர், அதே அடிதடி என்று காண்பித்தாலும் ஹரியின் அதிரடியான திரைக்கதை படத்திற்கு பெரிய பலமாக அமையும் என்ற தைரியத்தில் டீசரின் முடிவில் தீபாவளி வெளியீடு குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல், 65 தமிழ் அமைப்புகளின் எதிர்ப்புகளில் சிக்கியிருந்த விஜய்யின் கத்தி படத்தின் ஆடியோ விழாவை இம்மாதம் 18-ந்தேதி நடத்த திட்டமிட்டுள்ளனர். அதனால் கத்தியும் தீபாவளிக்கு திரைக்கு வருவது உறுதியாகி விட்டது. ஆக, தீபாவளிக்கு ஐ, கத்தி, பூஜை என்ற மூன்று மெகா படங்கள் வெளியாகி பலத்த மும்முனைப்போட்டி நடக்க உள்ளது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget