சிம்புவின் அதிரடி பேட்டி

சிம்பு ஹீரோவாக நடித்து கடைசியாக வெளிவந்த படம் போடா போடி. அதன்பின் கண்ணா லட்டு தின்ன ஆசையா, இங்க என்னா சொல்லுது
படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்தார். ஆனால் அவர் ஹீரோவாக, வாலு, வேட்டை மன்னன், இது நம்ம ஆளு, சற்றென்று மாறுது வானிலை உள்ளிட்ட நான்கு படங்களில் நடித்து வருகிறார். இதில் எந்தப்படமும் முடிந்ததாக தெரியவில்லை. எல்லா படமும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பல்வேறு பிரச்னைகளில் சிக்கி தவிக்கிறது. இதனால் சிம்பு ரசிகர்கள் விரக்தியில் உள்ளனர். சிம்புவின் படம் எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நவம்பர் மாதம் முதல் எனது படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகும் என்றும் கூறியிருக்கிறார் சிம்பு.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ''நான் நடித்து வரும் படங்களில் எல்லாம் ஒரு நடிகராக நான் எனது கடமையை முடித்துவிட்டேன். எனது ரசிகர்களை போலவே நானும் எனது படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று காத்திருக்கிறேன். வாலு, வேட்டை மன்னன் ஆகிய படங்களுக்கு ஒரே தயாரிப்பாளர். சில பிரச்னைகள் உள்ளது. அது தீர்க்கப்பட்டு படங்கள் வெளியாகும். இதில் வாலு படம் நவம்பரில் வெளியாக இருக்கிறது. இது நம்ம ஆளு படத்தின் ஷூட்டிங் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. கண்டிப்பாக இது நம்ம ஆளு படம் டிசம்பரில் வெளியாகும். இனி நவம்பர் மாதம் முதல் எனது படங்கள் தொடர்ச்சியாக வெளிவரும்'' என்று கூறியுள்ளார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget