நடிகைகளை துரத்தும் ஐஸ் பக்கெட் சவால்

அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த ஐஸ் பக்கெட் சவால் நிகழ்ச்சி வைரஸ் போன்று வேகவேகமாக பரவிக் கொண்டிருக்கிறது.
ஆரம்பத்தில் பாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா, சன்னி லியோன் உள்ளிட்ட நடிகைகளால் அமர்க்களமாக தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி பின்னர், அங்கிருந்து பரவி கோலிவுட்டிற்குள்ளும் புகுந்தது.

அதனால், ஹன்சிகா, த்ரிஷா உள்ளிட்ட நடிகைகளும் ஐஸ் பக்கெட் சேலஞ்ச் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சிக்கு மேலும் பரபரப்பு கூட்டினர். ஆனால், அப்படி பக்கெட் நிறைய ஐஸ் தண்ணீரை தலையில் ஊற்றி சவால் விட்ட ஹன்சிகா அதையடுத்து, சில தினங்களாக கடும் குளிர் ஜீரத்தில் அவதிப்பட்டாராம். அதனால் சில நாட்களாக படப்பிடிப்புகளுக்கு கூட லீவு போட்டுவிட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டாராம் ஹன்சிகா.

விளைவு, அடுத்தடுத்து தாங்களும் இந்த ஐஸ் பக்கெட் சேலஞ்ச் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் ஆர்வமாக இருந்த அனுஷ்கா, நயன்தாரா, தமன்னா ஆகியோர் இப்படியொரு ரிஸ்க் வேண்டவே வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டார்களாம். ஆனால், ஏற்கனவே அந்த நிகழ்ச்சி நடத்துபவர்களிடம் ஐஸ் பக்கெட் சவால் விடுவதற்கு, இவர்கள் ஒப்புதல் அளித்திருந்ததால், சம்பந்தப்பட்டவர்கள் இவர்களை துரத்திக் கொண்டிருக்கிறார்களாம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget