கோலிவுட்டில் நாயகி யுத்தம்

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஹீரோயின்களிடையே பலத்த போட்டி உருவாவது வழக்கம்தான். ஹீரோக்கள் 30, 40 வருடங்கள் வரை
தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தாலும் ஹீரோயின்களைப் பொறுத்தவரையில் அதிகபட்சம் 3 அல்லது 4 வருடங்கள் மட்டுமே முன்னணியில் இருப்பார்கள். அதன் பின் அவர்களுடைய மார்க்கெட் சரிய ஆரம்பிக்கும். அவர்களில் ஒரு சிலர் மட்டுமே அதையெல்லாம் கடந்தும் தாக்குப் பிடித்து நிற்பார்கள்.

அப்படிப் பார்த்தால் இப்போதுள்ள முன்னணி சீனியர் நடிகைகளில் நயன்தாராவும், த்ரிஷாவும் சுமார் பத்து ஆண்டு காலமாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போதுள்ள இளம் நடிகைகளில் ஹன்சிகா, சமந்தா, ஸ்ருதி ஹாசன் ஆகியோரிடையே தான் தற்போது பலத்த போட்டி நிலவி வருகிறது. சமந்தாவும், ஸ்ருதிஹாசனும் தெலுங்கில்தான் அதிகமாக கவனம் செலுத்தி வந்தனர். தற்போது திடீரென தமிழ்ப் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டனர்.

சமந்தா, 'அஞ்சான்' படத்தைத் தொடர்ந்து 'கத்தி, பத்து எண்ணுறதுக்குள்ளே' படங்களில் நடித்து வருகிறார். ஸ்ருதிஹாசன், 'பூஜை' படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார். ஹன்சிகா, “அரண்மனை, மீகாமன், வாலு, ரோமியோ ஜுலியட்” ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அடுத்து “ஆம்பள, இதயம் முரளி” ஆகிய படங்களில் நடிக்க உள்ளார். படங்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரையில் தற்போது ஹன்சிகாதான் முன்னணியில் உள்ளார்.

தமன்னா, காஜல் அகர்வால் இருவருக்கும் தமிழில் புதிதாக எந்தப் படங்களும் இல்லை. அனுஷ்கா 'லிங்கா' படத்திலும், அஜித் படத்திலும் நடித்து வருகிறார். பல புதுமுக நடிகைகள், வளர்ந்து வரும் நடிகைகள் இருந்தாலும் தற்போது முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் நடிகைகளைப் பற்றித்தான் ரசிகர்களும் அதிகம் பேசிக் கொள்கிறார்கள். அந்த விதத்தில் இந்த ஆண்டின் நம்பர் 1 இடத்திற்கு பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget