பற்கள் வெண்மையாக என்ன செய்யலாம்

அனைவருக்கும் முத்து போன்ற பற்களின் மேல் ஆசை உண்டு. இவற்றை வீட்டில் உள்ள பொருள்களை கொண்டு சுலபமான முறையில்
செய்யலாம். எப்படி பளீச் என்ற வெண்மையான பற்களை பெறலாம் என்பதை பற்றி பார்க்கலாம். 

வாழைப்பழம் அனைவராலும் எளிதில் வாங்கக்கூடியது. இது மிகவும் சத்துக்கள் நிறைந்தது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை ஆகும். ஆனால் வாழைப்பழத்தின் தோல் வெள்ளை நிற பற்களை பெற உதவுகிறது என்பது பலருக்கும் தெரியாத உண்மை ஆகும். அதனால் அனைவரும் வெள்ளை பற்கள் பெற வாழைப்பழத்தின் தோலை குப்பைத் தொட்டியில் போடாமல் எடுத்து வைத்து கொண்டு பயன்படுத்துங்கள். 

தினமும் இரண்டு முறை வாழைப்பழத்தின் தோலை எடுத்து ஒரு நிமிடம் பற்களை தேய்க்க வேண்டும். இதனால் வாழைப்பழத்தில் உள்ள கனிமங்களான பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்றவைகள் பற்களால் உறிஞ்சப்படுகிறது. இவற்றை வீட்டிலேயே சிறந்த முறையில் செய்து முத்து போன்ற வெண்மையான பற்களை பெறலாம். 

ஆரஞ்சு பழம் தோலும் வெண்மையான பற்கள் பெற உதவுகிறது. ஆரஞ்சு தோலை காய வைத்து பொடித்து கொள்ளவும். இந்த பொடியால் தினமும் பற்களை தேய்த்து வந்தால் தூய்மையான, வெண்மையான பற்களை பெறலாம். இவ்வாறாக செய்து உங்களுடைய பற்களை முத்து போன்ற பற்களாக மாற்றிடுங்கள்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget