நடிகர் பிரஷாந்த் நடித்து வரும் புதிய படம் சாகசம். இப்படத்தின் பிரஷாந்த் உடன் குத்தாட்டம் போட்டுள்ளார் பிரபல இந்தி நடிகை நர்கீஸ் பக்ரி.
வருகிற அக்டோபர் 20ம் தேதி நர்கீஸ்க்கு பிறந்தநாள், ஆனால் இந்தாண்டு தான் பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை என்று கூறியுள்ளார். அதேசமயம் தனது பிறந்தநாளையொட்டி ஒரு வேண்டுகோளும் வைத்துள்ளார்.
அதாவது, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, இதனால் அந்தமாநிலமே சின்னபின்னமாகி உள்ளது. இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக ketto.org என்ற பெயரில் இணையதளம் துவங்கியுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நிதி திரட்டி வருகிறார். சுமார் ஒரு மாத காலம் இந்த இணையதளம் செயல்பாட்டில் இருக்கும்.
இதுகுறித்து நர்கீஸ் கூறியுள்ளதாவது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு உதவ ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணினேன். அதன்படி இந்த இணையதளத்தை துவக்கி நிதி திரட்டி வருகிறேன். எனது பிறந்தநாள் வரை இந்த இணையதளத்தின் மூலமாக நிதி அளிக்கலாம். அப்படி அவர்கள் அளிக்கும் நிதி, ஏதாவது ஒரு குடும்பத்திற்கு உதவும். பிறந்தநாள், சுற்றுலா என்று நம்மில் பலர் எது எதுக்கோ செலவு செய்கிறோம், அந்த செலவை தவிர்த்து அதை இவர்களுக்கு அளித்தால் நிச்சயம் அவர்களின் வாழ்க்கைக்கு ஏதாவது ஒருவகையில் உதவும். எனது பிறந்தநாள் மூலமாக இவர்களுக்கு நான் உதவுவது பெருமையாக இருக்கிறது. நிச்சயம் எனது ரசிகர்களும் உதவுவார்கள் என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

கருத்துரையிடுக