நடிகையை பார்த்து பயந்து ஓடிய குரங்கு கூட்டம்

பாரதிராஜாவின் உதவியாளர் வினுபாரதி இயக்கி இருக்கும் படம் மூச். இது ஒரு திகில் படம். நிதின், மிஷா கோஷல், சுஹாசினி நடித்துள்ளனர். இந்த
படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. விழாவில் பேசிய இயக்குனர் வினுபாரதி சொன்ன சுவாரஸ்யமான தகவல் இது... 

இரண்டு குழந்தைகளுக்காக போராடும் ஒரு தாய் மற்றும் ஒரு பேயின் கதை இது. இதன் ஷூட்டிங் கிருஷ்ணகிரி அருகில் ஒரு கிராமத்தில் நடந்தது. ஒரு தென்னமரத் தோப்பில் படப்பிடிப்பு நடத்தினோம். 

கதைப்படி இறந்து பேயாக அலையும் கேரக்டரில் சுஹாசினி நடித்தார். இதற்காக அவரது முகத்தில் பேய் மேக் அப் போட்டு அது காய்வதற்காக தோட்டத்தின் ஒரு பகுயில் வெயில் அடித்த இடத்தில் உட்கார வைத்தோம். அப்போது தோட்டத்தில் சுற்றித்திரிந்து சுமார் 50 குரங்குகள் விழுந்தடித்து கூச்சல் போட்டபடியே வெளியே ஓடியது.

சுஹாசியின் மேக்அப்பை பார்த்துதான் அவைகள் மிரண்டு ஓடின. பின்னர் தோட்டக்காரர் வந்து "சார் நான் வெடிகுண்டு வைத்துமே போகாத குரங்குகள் உங்கள் நடிகையை பார்த்து ஓடிவிட்டேதே. இன்னும் நான்கு தோட்டத்தில் விரட்ட வேண்டும். அந்த பொண்ணை கொஞ்சம் அனுப்பி வையுங்க" என்றார். நாங்க சினிமா எடுக்க வந்தமா? குரங்கு விரட்ட வந்தமா என்று கேட்டு அவரை விரட்ட வேண்டியதாகிவிட்டது. என்றார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget