மொபைல் ஸ்மார்ட் போன் விற்பனையில், பன்னாட்டளவில், மைக்ரோசாப்ட் நிறுவனம் 3% பங்கினையே கொண்டுள்ளது. இதனை அதிகரிக்க,
மைக்ரோசாப்ட் வரும் மாதங்களில் பல முயற்சிகளை மேற்கொள்ள இருக்கிறது. அதில் ஒன்றாக, தன்னுடைய லூமியா வரிசை போன்களில், குறைந்த விலையில் பல மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதன் லூமியா 830 மொபைல் போன், பல புதிய வசதிகள் கொண்ட ஸ்மார்ட் போனாக வெளிவரும். சாம்சங் காலக்ஸி எஸ் 5 மற்றும் ஆப்பிள் ஐபோன் 5 எஸ் ஆகிய போன்களுக்கு இணையாக இதன் செயல்பாடுகள் இருக்கும் என்றும், ஆனால் விலையில், இவற்றுடன் ஒப்பிடுகையில், மிகவும் குறைவாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 430 அமெரிக்க டாலர் என்ற அளவில் இதன் விலை இருக்கலாம். இது மற்ற போன்களைக் காட்டிலும் 100 டாலர் குறைவான விலையாக அமையும் வாய்ப்பு உள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவன மொபைல் பிரிவின் துணைத்தலைவர் கிறிஸ் இது குறித்துக் கூறுகையில், ஆப்பிள் மற்றும் சாம்சங் சில வசதிகளுக்காக மிக உயர்ந்த விலையினை வாடிக்கையாளர்களிடமிருந்து பெறுகிறது. இது தேவையற்ற ஒன்று என எங்களுடைய புதிய மொபைல் போன்கள் மூலம் காட்டுவோம் என்று கூறியிள்ளார்.
இந்த புதிய போனின் கேமரா, இந்த வரிசையில் வெளியான, முந்தைய போன் மாடல்களைக் காட்டிலும் திறன் அதிகம் கொண்ட கேமராவாக இருக்கும். ஸ்டேண்ட் பை என்ற இயங்கா நிலையிலிருந்து, மிக விரைவில் இயங்கும் நிலைக்கு மாறிக் கொள்ளும் திறனை இந்த கேமரா கொண்டிருக்கும். இதன் வீடியோ 4K வீடியோவாக இருக்கும். ஹை டெபனிஷன் தன்மையைக் காட்டிலும் நான்கு பங்கு தெளிவான காட்சியைப் பதிவு செய்திடும்.
மேலும், இந்த போன்களின் செயல் திறனைக் கூட்டுவதற்காகவே, மைக்ரோசாப்ட் அப்ளிகேஷன் ஸ்டோரில், 3 லட்சத்து 20 ஆயிரம் அப்ளிகேஷன்கள், வாடிக்கையாளர்கள் தரவிறக்கம் செய்வதற்காகத் தரப்படுகின்றன. மேலும், தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் 500 அப்ளிகேஷன்கள் அப்லோட் செய்திடும் திட்டத்தினையும் மைக்ரோசாப்ட் அமல்படுத்துகிறது.
ஆனால், இந்த விலை குறைப்பு, ஸ்மார்ட் போன் விற்பனைச் சந்தையில், மைக்ரோசாப்ட் நிறுவன போன்களின் மதிப்பை உயர்த்துமா என்பது கேள்விக்குறியே. ஆப்பிள் மற்றும் கூகுளின் ஆண்ட்ராய்ட் சிஸ்டங்களின் தொழில் நுட்பச் சூழலையும் வசதிகளையும், மைக்ரோசாப்ட் கொண்டிருக்கவில்லை என்ற எண்ணம்தான், வாடிக்கையாளர்களிடையே நிலவி வருகிறது. பல அப்ளிகேஷன்கள் குறைவாகவே உள்ளதாக விண்டோஸ் 8 போன்கள் வந்தபோது மக்கள் கருதி வந்தனர். இந்த மறுதலையான எண்ண ஓட்டத்தினை மக்கள் மனதில் இருந்து அடியோடு ஒழிக்க வேண்டியது, இப்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலையாய இலக்காக உள்ளது. கிறிஸ் இது பற்றி கூறுகையில் இந்த விஷயத்தில் மைக்ரோசாப்ட் பல திட்டங்களை மேற்கொண்டு செயலாற்றி வருகிறது என்றார்.
பொதுவாக மொபைல் போன், குறிப்பாக ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கும் முன்பே, வாடிக்கையாளர், தான் என்ன போன் வாங்க வேண்டும் என்பதனை முடிவு செய்துவிடுகிறார். விலை, இணையத்தில் அது குறித்த கருத்துகள், ஏற்கனவே வாங்கிய நண்பர்களின் கருத்து மற்றும் விளம்பரங்களின் அடிப்படையில் இதற்கான முடிவினை எடுத்துவிடுகிறார். எனவே, இதனையும் மைக்ரோசாப்ட் கருத்தில் கொண்டு, இந்த தளங்களிலும் தங்கள் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

கருத்துரையிடுக