காதல் கோட்டையில் அஜித்குமார்

சினிமாவே சென்ட்டிமெண்ட் உலகம்தான். ஒரு படம் வெற்றியடைந்தவிட்டால் அந்தப் படம் எடுக்கப்பட்ட லொகேஷன் கூட ராசியான
லொகேஷனாகிவிடும். இதற்கு லேட்டஸ்ட் உதாரணமாகி இருக்கிறது ராஜஸ்தான். அஜித்தின் திரையுலகப் பயணத்தில் மிக முக்கியமான திருப்புமுனைப்படம் - காதல் கோட்டை. அகத்தியன் இயக்கிய இப்படத்தில் அஜித்தும், தேவயானியும் ஒருவரையொருவர் பார்க்காமலேயே காதலிப்பார்கள். தமிழ் சினிமாவில் புதிய டிரென்ட்டை அறிமுகம் செய்து வைத்த இப்படத்தில் நிறைய காட்சிகளை ராஜஸ்தானில் படமாக்கியிருந்தார்கள். அஜித் நடிப்பில் கடந்த வருடம் தீபாவளிக்கு வெளியான ஆரம்பம் படத்திலும் ராஜஸ்தானில் படமாக்கப்பட்ட காட்சிகள் இடம் பெற்றிருந்தன. 

ஏற்கெனவே ராஜஸ்தானில் படம்பிடிக்கப்பட்ட காதல் கோட்டையும் ஆரம்பமும் பெரிய வெற்றி பெற்றிருப்பதால் இப்படம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை காரணமாகவோ என்னவோ... தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்திலும் சில காட்சிகளில் ராஜஸ்தான் இடம் பெறுகிறது. அதற்கான படப்பிடிப்பு இன்று முதல் ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர், ஜோத்பூர் உட்பட பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது. ஒரு பாடல் மற்றும் சில காட்சிகள் என மொத்தம் 10 நாட்கள் ராஜஸ்தானிலேயே படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். கௌதம் மேனன் கதை சொல்லும்போது வேறு ஊரை குறிப்பிட்டதாகவும், அஜித்தே ராஜஸ்தானை விபாரிசு செய்ததாகவும் தகவல் அடிபடுகிறது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget