மலையாளத்தில் பாலச்சந்திரமேனனால் நடிகையாக அறிமுப்படுத்தப்பட்ட கவுசல்யா, காலமெல்லாம் காதல் வாழ்க படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். தேவயானியின் வருகைக்கு முன்பு மென்மையான குடும்ப கேரக்டர்களுக்கு கவுசல்யாதான் சாய்ஸ். நேருக்கு நேர், பிரியமுடன், பூவேலி, வானத்தைபோல உள்ளபட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
தொலைக்காட்சியில் சீரியல் வரத் தொடங்கியதும் சினிமாவில் இருந்து சீரியலுக்கு சென்றவர்களில் கவுசல்யா முக்கியமானவர். சீரியலில் கொடி கட்டி பறந்தவர். திடீரென்று நடிப்பதை நிறுத்திவிட்டு ஒதுங்கிக் கொண்டார்.
இப்போது அக்கா என்ற தொடர் மூலம் மீண்டும் வந்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: சின்னத்திரையில் உச்சத்தில் இருந்தபோதே ஒதுங்கினேன். காரணம் என் உடல் நிலை. ஹார்மோன் பிரச்சினையால் அவதிப்பட்டேன். உடல் எடை 105 கிலோவாக உயர்ந்தது. இதனால் தீவிரமான மருத்துவ சிகிச்சை, பரத் கபூரிடம் 4 வருடம் யோகா, தியானம் என கடுமையாக போராடி பழைய கவுசல்யாவாக திரும்பினேன். இப்போதுதான் நடிக்க வேண்டும் என்று தோன்றியது. கதை கேட்க ஆரம்பித்தேன் அக்கா கதை மிகவும் பிடித்திருந்தது.
ஒரு குடும்பத்தையே தாங்கி பிடிக்கும் ஒரு பெண்ணின் கதை இதுவரை 30 எபிசோட்கள் எடுக்கப்பட்டுள்ளது ஒரு சொட்டு கண்ணீர் கிடையாது. அந்த அளவுக்கு புதுமையாகவும், பெண்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாவும் இந்த தொடர் இருக்கும். என்கிறார் கவுசல்யா.
கருத்துரையிடுக
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.