விண்டோஸ் 10 இயங்குதள ஹார்ட்வேர்

விண்டோஸ் 10 தொழில் நுட்ப முன்னோட்டக் கருத்தரங்கில், விண்டோஸ் 10 இயக்க முறைைமயைப் பயன்படுத்த, ஒரு கம்ப்யூட்டரில்
தேவையான ஹார்ட்வேர் தேவைகள் என்ன என்ன என்று, தெளிவாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், மைக்ரோசாப்ட் நிறுவன வல்லுநர் ஷா (Frank Shaw) தன் ட்விட்டர் பக்கத்தில் விண்டோஸ் 8க்கான ஹார்ட்வேர் தேவைகளே இதற்கும் போதும் என அறிவித்துள்ளார். எனவே, விண்டோஸ் 8 சிஸ்டம் கொண்டுள்ள பெர்சனல் கம்ப்யூட்டர், லேப்டாப் ஆகியவையே, விண்டோஸ் 10 பதித்து இயங்கவும் போதுமானதாக இருக்கும். இதனால், தற்போது கம்ப்யூட்டர் புதியதாய் வாங்கிடத் திட்டமிடுபவர்கள், விண்டோஸ் 10 சிஸ்டம் வரட்டும் எனக் காத்திருக்க வேண்டியதில்லை.

மேலும், விண் 8 கட்டணம் செலுத்தி வாங்கியவருக்கு, விண் 10 இலவசமாகவே கிடைக்கும் எதிர்பார்ப்பும் மக்களிடம் உள்ளது.
விண்டோஸ் 8.1 சிஸ்டம் இயங்கத் தேவையான ஹார்ட்வேர் தேவைகளை இங்கு பட்டியலிடலாமா!

ப்ராசசர்: ஒரு கிகா ஹெர்ட்ஸ் அல்லது கூடுதல் வேகத்தில் இயங்கும் ப்ராசசர் இது PAE, NX, and SSE2 ஆகியவற்றை சப்போர்ட் செய்திட வேண்டும். 

ராம் நினைவகம்: 32 பிட் என்றால், குறைந்தது 1 ஜி.பி. 64 பிட் என்றால், குறைந்தது 2 ஜி.பி.

ஹார்ட் டிஸ்க் இடம்: 32 பிட் என்றால்,  குறைந்தது 16 ஜி.பி. 64 பிட் கம்ப்யூட்டருக்கு 20 ஜி.பி.

கிராபிக்ஸ் கார்ட்: Microsoft DirectX 9 கிராபிக்ஸ் WDDM ட்ரைவருடன்.
மேலே தரப்பட்டுள்ளவை மிக மிகக் குறைவானவையே. இப்போது ஹார்ட் டிஸ்க் குறைந்தது 500 ஜி.பி. என்ற அளவில் தான் கிடைத்து பொருத்தப்படுகிறது.

மைக்ரோசாப்ட், குறைந்த அளவினை நினைவூட்டியதன் மூலம், விண்டோஸ் 7 இயங்கும் கம்ப்யூட்டர்களும், விண்டோஸ் 10க்கு மாறிக் கொள்ளலாம் என்று அறிவுறுத்துகிறது. விண்டோஸ் 7 சிஸ்டம் இயங்க, அதில் உள்ள ப்ராசசர் PAE, NX, and SSE2 ஆகியவற்றை சப்போர்ட் செய்திடத் தேவையில்லை. 
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget