மலிவான விலையில் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்

ரூ.2,699 என விலையிட்டு, இண்டெக்ஸ் அகுவா நிறுவனம் தன் ஸ்மார்ட் போனை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கிடைக்கும்
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களில், இதுவே விலை குறைவானதாகும். இதன் பெயர் Intex Aqua T2 . இதற்கு முந்தைய வாரத்தில், அகுவா 4 எக்ஸ் வெளியானது. இதில் 4 அங்குல திரையும், 3ஜி வசதியும், ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட் சிஸ்டமும் உள்ளன. 

அகுவா டி2 ஸ்மார்ட் போனில் 3.5 அங்குல HVGA திரை உள்ளது. 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் MediaTek MT6571 processor தரப்பட்டுள்ளது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட். இதில் இரண்டு சிம்களை இயக்கலாம். எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 2 எம்.பி. திறன் கொண்ட கேமரா பின்புறமாக இயங்குகிறது. 0.3 எம்.பி. திறன் கொண்ட கேமரா முன்புறமாக உள்ளது. எப்.எம். ரேடியோ மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளது. இதன் ராம் மெமரி 256 எம்.பி. ஸ்டோரேஜ் மெமரி 512 எம்.பி. இதனை 32 ஜி.பி. வரை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு அதிகப்படுத்தலாம். நெட்வொர்க் இணைப்பிற்கு 2ஜி, வை பி மற்றும் புளுடூத் இயங்குகிறது. இதன் பேட்டரி 1300 mAh திறன் கொண்டது. ப்ளிப் கார்ட் தளத்தில் இது கிடைக்கிறது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget