விண்டோஸ் 10 தொகுப்பின் தொழில் நுட்ப முன்னோட்டப் பதிப்பு பலரால் பாராட்டப்பட்டு வருகிறது. பன்னாடுகளில் இருந்து, விண்டோஸ்
விசுவாசிகள், ”இது நமக்கானது. நாம் எதிர்பார்க்கும் அனைத்தும் இதில் தரப்பட்டுள்ளது” என்று பாராட்டி, அதன் சிறப்பு அம்சங்களைப் பட்டியலிட்டு வருகின்றனர். இவர்களின் கருத்து, அனைத்து நாட்டு மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருவதனை, ஆங்காங்கே இணையத்தில் பதியப்படும் கட்டுரைகளைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம். பரவலாகக் காணப்படும் சில தகவல்களையும் கருத்துகளையும் இங்கு காணலாம்.
விண்டோஸ் 8 சிஸ்டம் குறித்து மக்கள் பலத்த ஏமாற்றம் அடைந்ததனை நாம் அனைவரும் அறிவோம். கம்ப்யூட்டர் மலரின் பல பக்கங்களில் இந்த ஏமாற்றத்தினைக் காட்டும் மக்கள் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. தொடு உணர் திரையுடன் நாம் தரும் சிஸ்டத்தினை மக்கள் மிக மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டு வரவேற்பு தருவார்கள் என்று எதிர்பார்த்த மைக்ரோசாப்ட் முன்னணி தொழில் நுட்ப வல்லுநர்கள், மக்களின் எதிர்ப்பினைக் கண்டு, ஏமாற்றத்தை வெளிப்படுத்திய தன்மையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். திடீரெனத் தரப்படும் முற்றிலுமான தொழில் நுட்ப மாற்றங்களை சாதாரண மக்கள் விரும்பி உடனே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்ற உண்மையினை மைக்ரோசாப்ட் நிறுவன உயர் வல்லுநர்கள் உணர்ந்தனர். எப்படி, விண்டோஸ் 8, முந்தவற்றைக் காட்டிலும் முழுமையான மாற்றங்கள் கொண்ட ஆப்பரேட்டிங் சிஸ்டம் என மைக்ரோசாப்ட் அறிவித்ததோ, அதே போல, அடுத்த விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டமும், முந்தையதிலிருந்து, அதாவது விண்டோஸ் 8லிருந்து, முற்றிலும் மாறுதலான சிஸ்டமாக இருக்க வேண்டும் என முடிவெடுத்தனர். ஆனால், இந்த முறை இலக்கு கோடானு கோடி மக்களுக்கானதாக இருந்தது.
விண்டோஸ் 8 தந்த தேவையற்ற மாற்றங்கள் மொத்தமாக பின்னுக்குத் தள்ளப்பட்டன. எவற்றை முன்னிலைப்படுத்தி விண்டோஸ் 8 அறிமுகப்படுத்தப்பட்டனவோ, அவை எல்லாம் மக்களிடம் வரவேற்பினைப் பெறவில்லை. மாறாக, ஏமாற்றத்தையும் எரிச்சலையும் தரும் விஷயங்களாகப் பார்க்கப்பட்டன. பெரும்பாலான மக்களிடம் தொடு உணர் திரை கொண்ட மானிட்டர் இல்லை. அதற்கு மாறிக் கொள்ள வேண்டும் என்றால், பணச் செலவு அதிகம். மேலும், புதிய விஷயங்கள் பலவற்றைக் கற்றுக் கொள்வதனை விண்டோஸ் 8 எதிர்பார்த்தது. இதனை மக்கள் விரும்பவில்லை. அவர்கள் வேலைக்கிடையே இதற்கு நேரம் ஒதுக்கிட அவர்களிடம் நேரம் இல்லை.
தற்போது அவை எல்லாம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. விண்டோஸ் 10 சிஸ்டத்தினை இயக்கிய எல்லாரும், மைக்ரோசாப்ட் தனது தவறினை ஒத்துக் கொண்டது. விண்டோஸ் 8 சிஸ்டம் தான் செய்த பெரிய தவறு என மைக்ரோசாப்ட் உணர்ந்து கொண்டது எனக் கருத்து தெரிவித்தனர். விண்டோஸ் 10ல், மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதனை மைக்ரோசாப்ட் முன்னிலைப்படுத்தியுள்ளது எனப் பாராட்டியுள்ளனர்.
விண்டோஸ் 10 உங்களையோ அல்லது குறிப்பாக ஒரு பிரிவினரையோ முன்னிலைப் படுத்தி வடிவமைக்கப்படவில்லை. தொடு உணர் திரை இயக்கம் இல்லாமல், பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்படுத்தி வந்த பெரும்பாலான மக்களின் விருப்பத்தினை இலக்காகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், இவர்கள் தான், விண்டோஸ் சிஸ்டத்தினை அடிப்படையாகக் கொண்டு, பல நூறு கோடி வேலை நாட்களில் தங்களுக்கான பணித் திட்டத்தினை, விண்டோஸ் சிஸ்டத்தின் அடிப்படையில் அமைத்து இயக்கி வந்தனர். இதில், அப்படியே முழுமையாக அடியோடு மாற்றங்களைக் கொண்டு வந்தால், யார் தான் ஏற்றுக் கொள்வார்கள்.
விண்டோஸ் 8 கொண்டு வந்த மாற்றங்களினால், மனம் பதைத்தவர்கள், இப்போது விண்டோஸ் 10 கொண்டு வர இருக்கும் முறைமையினைப் பார்த்து நிம்மதி அடைந்துள்ளனர். விண்டோஸ் 10, தொழில் நுட்பம் தெரிந்த மேதாவிகளுக்கானது அல்ல. விண்டோஸ் 10 என்பது மக்களுக்கான விண்டோஸ் இயக்கம் என்பது இப்போது அனைவரின் நெஞ்சிலும் அமைதியைக் கொண்டு வந்துள்ளது.
விண்டோஸ் 8 முறைமை, எந்த சந்தேகத்திற்கும் இடம் இல்லாமல், ஒரு மிகச் சிறந்த மாற்றத்தைக் கொண்டு வந்த இயக்கம் தான். விண்டோஸ் இயக்கத்தினை, ஒரு தொடர் உணர் திரை இயக்க மேடையாக விண்டோஸ் 8 மூலம் மாற்றிவிட்டால், பெர்சனல் கம்ப்யூட்டரில் இந்த புதிய நிலைகளை மக்கள் விரும்பி ஏற்றுக் கொள்வார்கள் என, மைக்ரோசாப்ட் எதிர்பார்த்தது. ஆனால், அந்த எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. இதற்கு முதல் காரணம், ஒவ்வொரு ஆண்டும், புதிய கம்ப்யூட்டர்களை வாங்கி தங்கள் பணியினைத் தொடர மக்கள் தயாராக இல்லை. மேலும், விண்டோஸ் 8 சிஸ்டம் தந்த யூசர் இண்டர்பேஸ் தொடர்பற்ற இயக்கமாக இருந்தது.
மேலும், மைக்ரோசாப்ட் மற்றும் அதனுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, கம்ப்யூட்டரைத் தயாரித்து வழங்கியவர்கள், இந்த புதிய விண்டோஸ் 8 சிஸ்டம் தரும் வசதிகள் குறித்து மக்களிடையே எந்த எதிர்பார்ப்பினையும், விழிப்புணர்வினையும் ஏற்படுத்தவில்லை. தாங்கள் எது தந்தாலும், அதனை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என அவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அது நடைவேறவில்லை. அதனாலேயே விண்டோஸ் 8 அறிமுகம் ஒரு மாபெரும் தவறான நடவடிக்கை என மைக்ரோசாப்ட் ஒத்துக் கொண்டது. எனவே அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம், விண்டோஸ் 8 சார்ந்த எதுவும் இல்லாமல், மக்கள் விரும்பும் ஒரு முறைமையாக இருக்க வேண்டும் என முடிவெடுத்து, மைக்ரோசாப்ட் செயல்பட்டு, விண்டோஸ் 10னை உருவாக்கியுள்ளது.
விண்டோஸ் 8 சிஸ்டம் தந்த புதிய வசதிகளை விரும்பி ஏற்றுக் கொண்டு தொடர்ந்து செயல்பட்டவர்களுக்கு, இந்த திருப்பமான முடிவு, நிச்சயம் ஏமாற்றத்தை அளிக்கும். ஸ்டார்ட் மெனு மற்றும் விண்டோஸ் டெஸ்க்டாப் மீண்டும் வருவது இவர்களுக்குப் பிடிக்காமல் இருக்கும். இவர்களைக் குற்றம் சாட்ட வேண்டியதில்லை. மிகக் கஷ்டப்பட்டு தங்கள் பணி நிலையை, விண்டோஸ் 8 சிஸ்டத்தை மையமாகக் கொண்டு மாற்றி அமைத்து செயல்பட்டு வருபவர்கள் இவர்கள். மீண்டும் பழைய சிஸ்டம் முறைமைக்கே செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அது நிச்சயம் இவர்களுக்கு ஏமாற்றமாகத்தான் இருக்கும். இதில், இவர்கள், இடையே சிரமப்பட்டு, விண்டோஸ் 8.1 சிஸ்டத்திற்கேற்பவும் தங்களின் பணிப் பண்பாட்டினை மாற்றிக் கொண்டார்கள். எனவே, சிலருக்கு, விண்டோஸ் 10 சற்றுப் பின்னோக்கிச் செல்வது ஏமாற்றத்தைத் தரலாம். ஆனால், பணி மேற்கொள்வதில் சிரமம் இருக்காது. ஆனால், விண்டோஸ் 10 மிகவும் பழகியதாகவே இருக்கும்.
விண்டோஸ் 8 தந்த தோல்வியை அப்படியே ஏற்றுக் கொண்டு, விண்டோஸ் 10 வடிவமைத்த முறையும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஒரு தைரியமான செயல்பாடு தான் என்று பாராட்ட வேண்டும். விண்டோஸ் 10 முறைமை அனைவருக்கும் பழகிய ஒன்றாகவும், ஆறுதல் அளிப்பதாகவும் உள்ளது. இப்படித்தான் ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் இருக்க வேண்டும் என மக்கள் ஏற்றுக் கொண்டு கருத்து தெரிவித்துள்ளனர். இதில் விண்டோஸ் 8 சிஸ்டம் அறிமுகப்படுத்திய பல விஷயங்கள், வசதிகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், அவை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. தேவை என்றால் எடுத்துக் கொள்ளட்டும் என ஒரு பக்கம் ஒதுக்கியே வைக்கப்பட்டுள்ளன.
“நான் பார்க்கும் விஷயங்கள் 'என்னுடைய கட்டுப்பாட்டிற்குள்ளேயே இருப்பவை' என்ற உணர்வினை விண்டோஸ் 10 தருகிறது” என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். நமக்குத் தேவையான அப்ளிகேஷன்களை மட்டும் இயக்கி, நம் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு போய்க் கொண்டே இருக்கலாம். விண்டோஸ் மட்டுமல்ல, எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டமும் அப்படித்தான் இருக்க வேண்டும்.
மேலும், இப்போது தரப்பட்டுள்ள சோதனை தொழில் நுட்ப முன்னோட்டத்தின் அடிப்படையில் தெரிவிக்கப்படும் கருத்துக்களை, ஆலோசனைகளை மைக்ரோசாப்ட் ஏற்றுக் கொண்டு, முடிவான விண்டோஸ் 10 சிஸ்டத்தை அடுத்த ஆண்டு தரும். எனவே, நிச்சயம், வர இருக்கும் இறுதி சிஸ்டம் பதிப்பு, மக்களுக்கானதாய் இருக்கும் என்று அனைவரும் நம்புகின்றனர்.

கருத்துரையிடுக