காதலை பற்றி மனம் திறக்கும் சபர்னா

நாணயம், ரேகா ஐ.பி.எஸ், அரசி, சொந்தபந்தம், துளசி, பிரிவோம் சந்திப்போம் தொடர்களில் நடித்தவர் சபர்ணா. தற்போது புதுக்கவிதையில்
தினேசுடன் நடித்து வருகிறார். சபர்ணாவுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வருகிறார்கள். விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். 
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: நான் பக்கா கோயம்புத்தூர் பொண்ணு. டிகிரி முடிச்சதுமே மீடியாதான் என்னோட சாய்ஸா இருந்தது. சென்னை வந்தேன். மியூசிக் சேனல்ல வேலை பார்த்தேன். நிகழ்ச்சிக்கு வந்த சினிமா பிரபலங்கள் நடிக்க கூப்பிட்டாங்க. படிக்காதவன், பிரிவோம் சந்திப்போம், காளை உள்பட சில படங்களில் நடிச்சேன். அப்புறம் சீரியல் வாய்ப்பு வந்தது. சினிமாவை விட சீரியல் பெட்டரா தெரிஞ்சுது நடிக்க ஆரம்பிச்சிட்டேன்.

அதன் பிறகு வந்த சினிமா வாய்ப்புகளை தவிர்த்துட்டேன். இந்த நடிப்பு வாழ்க்கையில் எனக்கும் காதல் வந்தது. நானும் காதலிச்சேன். ஆனால் என்னோட செலக்ஷன் தப்பாகிவிட்டது. காதலில் இருந்து நானும் வெளியில வந்துட்டேன். இனி அப்பா அம்மா சாய்சுக்கு விட்டுட்டேன். அவுங்க யாரை கை காட்டுறாங்களோ அவரை கட்டிக்கிட்டு கல்யாணத்துக்கு பிறகு அவரை லப் பண்ணலாமுங்ற ஐடியாவுல இருக்கேன் என்கிறார் சபர்ணா.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget