விண்டோஸ் 10 ஸ்டார்ட் மெனுவில் கூடுதல் வசதிகள்

புதியதாக வர இருக்கும் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், ஸ்டார்ட் மெனு மீண்டும் தரப்பட்டுள்ளது. ஆனால், இதில் அதிகக்
கூடுதல் வசதிகள் உள்ளதாக, இதன் தொழில் நுட்ப சோதனைப் பதிப்பினை இயக்கிப் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவை என்னவென்று இங்கு பார்க்கலாம்.

1. ஸ்டார்ட் மெனுவின் மேல்புறமாகக் கர்சரைக் கொண்டு சென்று, அதில் வைத்து, கர்சரை இழுத்து, ஸ்டார்ட் மெனுவின் பரப்பினைச் சுருக்கலாம், நீட்டிக்கலாம்.

2. டைல்ஸ் மீது கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்து, அவற்றை ஸ்டார்ட் மெனுவில் பின் செய்திடலாம். அல்லது பின் செய்ததிலிருந்து நீக்கலாம்.
3. ஸ்டார்ட் மெனுவின் வலது பக்கமாகவும், டைல்ஸ் புரோகிராம்களை பின் அப் செய்திடலாம். நீக்கிடலாம்.

4. டைல்ஸ்களின் அளவினைக் குறைக்கலாம். அதன் மீது ரைட் கிளிக் செய்து Resize தேர்ந்தெடுக்க வேண்டும். 

5. சிமிட்டும் டைல்ஸ்கள் உங்களுக்கு எரிச்சலைத் தருவதாக இருந்தால், அவற்றின் மீது ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், “Turn live tile off” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

6. ஸ்டார்ட் மெனு மற்றும் டாஸ்க்பாரின் வண்ணத்தினை மாற்றலாம். காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Personalize என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். Color and Appearance டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் நீங்கள் விரும்பும் வண்ணத்தினை தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.

7. ஸ்டார்ட் மெனுவின் இடதுபுறமும், புரோகிராம்களை பின் அப் செய்திடலாம். ஆனால், இது நமக்கு சற்று கூடுதலான வேலையைக் கொடுக்கும். ஆனால், எந்த நேரத்திலும், இடது புறம் இருப்பதனை வலது பக்கத்திற்கும், வலது புறம் இருப்பதனை இடது புறத்திற்குமாக மாற்றலாம்.

8. எந்த புரோகிராமினையாவது, ஸ்டார்ட் மெனுவிலிருந்து நீக்க விரும்பினால், அதன் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், “Remove from this list” என்பதில் கிளிக் செய்திடவும்.

9. ஸ்டார்ட் மெனுவின் இடது பக்கத்தில் கண்ட்ரோல் பேனல் மற்றும் விசேஷமான புரோகிராமினை இடம் பெறச் செய்திடலாம். காலியாக உள்ள இடத்தில், ரைட் கிளிக் செய்து, ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். பின், ஸ்டார்ட் மெனு டேப் தேர்ந்தெடுத்து, அதன் பின்னர், Customize பட்டனில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் டயலாக் பாக்ஸில், உங்களுக்குத் தேவையான ஸ்பெஷல் புரோகிராம்களைத் தேர்ந்தெடுக்கலாம். 

அனைத்து லைவ் டைல்ஸ்களையும் நீக்கி, ஸ்டார்ட் மெனுவினை விண்டோஸ் 7 ஸ்டார்ட் மெனு போல அமைத்திடலாம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget