விண்டோஸ் 10 இயங்குதள விமர்சனம்

அண்மையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட, விண்டோஸ் 10 தொழில் நுட்ப சோதனைத் தொகுப்பினை பத்து லட்சம் பேருக்கும்
அதிகமாகத் தரவிறக்கம் செய்துள்ளனர். அனைவருமே, அதனை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி வருகிறார்களா என்பது இனிமேல் தான் தெரியவரும் என்றாலும், பத்து லட்சம் பேர் பயன்படுத்துவார்கள் என்று மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது. இதனைக் கணக்கிட மைக்ரோசாப்ட் நிறுவனம், Windows Insider Program என்னும் புரோகிராமினை இயக்கி வருகிறது. விண்டோஸ் 10 சோதனைத் தொகுப்பினை நாம் பயன்படுத்தத் தொடங்குகையில், இந்த புரோகிராமில் நம்மைப் பற்றிய தகவல்களைப் பதிந்து கொள்ளலாம். இதுவரை பத்து லட்சம் பேர் இதில் பதிந்து கொண்டுள்ளனர். இதில் இணைந்துள்ள பின்னூட்டுக்கான புரோகிராமினைப் பயன்படுத்தி, இத்தொகுப்பு குறித்த கருத்துகளைப் பயனாளர்கள் பகிர்ந்து கொள்ளலாம்.

இந்த புரோகிராமில் பதிந்து கொள்ளாமலும், சோதனைத் தொகுப்பினை இயக்கலாம். இதில் பதிந்து கொண்ட பின்னர், இதனை இயக்காமலும் இருக்கலாம். எனவே, இந்த புரோகிராமில் பதிவு செய்து கொண்டவர்களின் எண்ணிக்கையைக் கொண்டு, எத்தனை பேர் விண்டோஸ் 10 பயன்படுத்தி வருகின்றனர் என்பதைச் சரியாகக் கணிக்க இயலாது. இருப்பினும், குறைந்தது ஒரு கோடி பேர் வரை இதனைப் பயன்படுத்த முன்வருவார்கள் என மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது. ஏற்கனவே, அதிக அளவில் பின்னூட்டுகள் வரத் தொடங்கி விட்டன என்றும், புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைச் சீர் படுத்த, இவை நிச்சயம் பெரிய அளவில் உதவும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

சோதனைத் தொகுப்பினைப் பயன்படுத்த எப்போதும் விர்ச்சுவல் சூழ்நிலையைப் பயன்படுத்துவதே நல்லது. அப்போதுதான் ஏற்கனவே நம் பெர்சனல் கம்ப்யூட்டரில் இயங்கி வரும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு எந்த பிரச்னையும் ஏற்படாது. ஆனால், இதுவரை அறியப்பட்ட சோதனைத் தொகுப்பினைப் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களில், 36% கம்ப்யூட்டர்களில் மட்டுமே ''விர்ச்சுவல் மெஷினில்” பதிந்து பயன்படுத்தப்படுகிறது. மற்ற 64% கம்ப்யூட்டர்களில், சோதனைத் தொகுப்பே முழுமையான அளவில் இயக்கப்படுகிறது. இவை பெரும்பாலும், டூயல் பூட்டிங் முறையில் இருக்கலாம் என்றும் மைக்ரோசாப்ட் கருத்து தெரிவித்துள்ளது.

Windows Insider Program தவிர, சோதனைத் தொகுப்பு குறித்த நம் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும், சந்தேகங்களை வெளியிடவும், கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் தெரிந்தால் கூறவும் ஒரு வலைத்தளம் இயங்குகிற்து. அதன் முகவரி

நம்முடைய கருத்துக்களை பின்னூட்டமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குத் தெரிவிக்க இந்த முகவரியில் உள்ள தளத்தினையும் பயன்படுத்தலாம். 

விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மக்கள் ஒதுக்கித் தள்ளியது போல, விண்டோஸ் 10 சிஸ்டத்தினையும் ஒதுக்கி வைத்திடக் கூடாது என மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது. எனவே, சோதனைத் தொகுப்பின் அடிப்படையில் கூறப்படும் அனைத்து கருத்துக்களையும், மைக்ரோசாப்ட் தொழில் நுட்ப வல்லுநர்கள், சீர் தூக்கிப் பார்த்துத் தேவையான மாற்றங்களை மேற்கொள்வார்கள்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget