மைக்ரோசாப்ட் நிறுவனம், இந்தியாவில் லூமியா 930, லூமியா 830 மற்றும் லூமியா 730 ஆகிய மூன்று புதிய இரட்டை சிம் ஸ்மார்போன்களை ரூ. 38,649, ரூ.28,799 மற்றும் ரூ. 15,299 விலைகளில் அறிமுகபடுத்தியுள்ளது. லூமியா 930 ஸ்மார்போன் அக்டோபர் 15ம் தேதியில் இருந்து கிடைக்கும், மற்ற இரண்டுமே அக்டோபர் 8ம் தேதியில் இருந்து கிடைக்கும்.
லூமியா 930, லூமியா 830 மற்றும் லூமியா 730 இரட்டை சிம் ஸ்மார்போன்கள் விண்டோஸ் போன் 8.1ல் இயங்குகிறது. லூமியா 830 ஸ்மார்ட்ஃபோனில் புதிய லூமியா டெனிம் மேம்படுத்தல் கிடைக்கும். மேலும், லூமியா 730 இரட்டை சிம் ஸ்மார்போன் Q4 2014 இல் கிடைக்கும். அனைத்து 3 ஸ்மார்போன்களுக்கும் 6 மாதங்களுக்கு ஒன்டிரைவ் வழியாக 1TB இலவச கிளவுட் சேமிப்பு கிடைக்கின்றன. 6 மாதங்களுக்கு பிறகு பயனர்கள் மாதத்திற்கு ரூ.100 மட்டும் செலுத்த வேண்டும்.
லூமியா 930 ஸ்மார்போன்: லூமியா 930 ஸ்மார்ட்ஃபோனில் 1080x1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது மற்றும் 441ppi பிக்சல் அடர்த்தி வழங்குகிறது. திரையில் கொரில்லா கிளாஸ் 3, 'சூப்பர் சென்சிட்டிவ் டச்' மற்றும் 180 டிகிரி வியூவிங் ஆங்கிள் அம்சங்களை கொண்டுள்ளது. லூமியா 930 ஸ்மார்ட்ஃபோனில் ரேம் 2GB உடன் இணைந்து ஒரு 2.2GHz குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 800 SoC ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது, மற்றும் 32 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு (7GB இலவச ஒன்டிரைவ் கிளவுட் சேமிப்பு) உள்ளது.
மேலும் லூமியா 930 ஸ்மார்ட்ஃபோனில், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிளைசேஷன் (OIS) மற்றும் கார்ல் ஜெய்ஸ் ஆப்டிக்ஸ் கொண்ட 20 மெகாபிக்சல் ப்யூர்வியூ(PureView) பின்புற கேமரா உள்ளது. 1.2-மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் வைட் ஆங்கிள் கேமரா கொண்டுள்ளது. தவிர நான்கு திசை மைக்ரோபோன்கள் மற்றும் டால்பி சரவுண்ட் ஒலி ஒருங்கிணைத்துள்ளது.
ஸ்மார்ட்ஃபோனில் ஒரு LTE குவாட் பேண்ட் சிப் மற்றும் ப்ளூடூத் 4.0 LE ஆதரவை கொண்டுள்ளது. பிரைட் ஆரஞ்சு, பிரைட் கிரீன், ப்ளாக் மற்றும் வைட் வண்ணங்களுடன் ஒரு வளைந்த பாலிகார்பனேட் மற்றும் அலுமினிய ஃப்ரேம் உடன் மெட்டாலிக் அசென்ட்ஸ் அம்சங்களை கொண்டுள்ளது. இதில் 2420mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது, மற்றும் வயர்லெஸ் சார்ஜ் உள்ளமைக்கப்பட்டு வருகிறது.
லூமியா 830 ஸ்மார்போன்: லூமியா 830 ஸ்மார்ட்ஃபோனில் 720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் HD க்ளியர்பிளாக் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது மற்றும் 296ppi பிக்சல் அடர்த்தி வழங்குகிறது. இது ரேம் 1GB உடன் இணைந்து 1.2GHz குவாட் கோர் ஸ்னாப்ட்ராகன் 400 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்ஃபோனில் microSD அட்டை வழியாக 128GB மேலும் விரிவாக்கக்கூடிய 16 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது.
இது ஒரு 2200mAh பேட்டரி ஆதரவு கொண்டுள்ளது. மேலும், இது வயர்லெஸ் சார்ஜ் ஆதரிக்கிறது. இது கிரீன் கிரே, ஆரஞ்சு, மற்றும் வைட் வண்ணங்களில் கிடைக்கும். லூமியா 830 ஸ்மார்ட்ஃபோனில் 'மெல்லிய' ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிளைசேஷன் (OIS) மற்றும் LED ஃபிளாஷ், கார்ல் ஜெய்ஸ் ஆப்டிக்ஸ் உடன் 10 மெகாபிக்சல் ப்யூர்வியூ(PureView) பின்புற கேமரா உள்ளது. மேலும், 1.2-மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.
லூமியா 730 ஸ்மார்போன்: லூமியா 730 ஸ்மார்ட்ஃபோனில் 720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4.7 இன்ச் HD டிஸ்ப்ளே கொண்டுள்ளது மற்றும் 316ppi பிக்சல் அடர்த்தி வழங்குகிறது. திரையில் பாதுகாப்புக்காக கொரில்லா கிளாஸ் 3 கொண்டுள்ளது. லூமியா 730 ஸ்மார்ட்ஃபோனில் ரேம் 1GB உடன் இணைந்து ஒரு 1.2GHz குவாட் கோர் ஸ்னாப்ட்ராகன் 400 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்ஃபோனில் microSD அட்டை வழியாக 128GB மேலும் விரிவாக்கக்கூடிய 8 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது.
இது பிரைட் ஆரஞ்சு, பிரைட் கிரீன், டார்க் கிரே மற்றும் வைட் வண்ணங்களில் கிடைக்கும். ஸ்மார்ட்ஃபோனில் எல்இடி ப்ளாஷ் கொண்ட 6.7 மெகாபிக்சல் பின்புற கேமரா, மற்றும் 24mm பரந்த கோணம் லென்ஸ் கொண்ட 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. இது இரட்டை சிம் ஸ்மார்ட்போன் ஆகும் மற்றும் 3G இணைப்பு கொண்டுள்ளது. லூமியா 730 இரட்டை சிம் ஸ்மார்போன் யூசர்களுக்கு 15GB இலவச ஒன்டிரைவ் கிளவுட் சேமிப்பு வழங்குகிறது. இதில் 2220mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.
லூமியா 930 ஸ்மார்போன் குறிப்புகள்:
- 1080x1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் டிஸ்ப்ளே,
- 441ppi பிக்சல் அடர்த்தி,
- ரேம் 2GB,
- 2.2GHz குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 800 SoC ப்ராசசர்,
- 32 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,
- 20 மெகாபிக்சல் பின்புற கேமரா,
- 1.2-மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
- ப்ளூடூத் 4.0 LE,
- விண்டோஸ் போன் 8.1,
- 2420mAh பேட்டரி.
லூமியா 830 ஸ்மார்போன் குறிப்புகள்:
- 720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் HD ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே,
- 296ppi பிக்சல் அடர்த்தி,
- ரேம் 1GB,
- 1.2GHz குவாட் கோர் ஸ்னாப்ட்ராகன் 400 ப்ராசசர்,
- microSD அட்டை வழியாக 128GB விரிவாக்கக்கூடிய 16 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,
- 10 மெகாபிக்சல் பின்புற கேமரா,
- 1.2-மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
- விண்டோஸ் போன் 8.1,
- 2200mAh பேட்டரி.
லூமியா 735 ஸ்மார்போன் குறிப்புகள்:
- 720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4.7 இன்ச் டிஸ்ப்ளே,
- 1.2GHz குவாட் கோர் ப்ராசசர்,
- ரேம் 1GB,
- microSD அட்டை வழியாக 128GB மேலும் விரிவாக்கக்கூடிய 8 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,
- 6.7 மெகாபிக்சல் பின்புற கேமரா,
- 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
- விண்டோஸ் போன் 8.1,
- 2220mAh பேட்டரி.
லூமியா 730 ஸ்மார்போன் குறிப்புகள்:
- 720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4.7 இன்ச் HD டிஸ்ப்ளே,
- 316ppi பிக்சல் அடர்த்தி,
- ரேம் 1GB,
- 1.2GHz குவாட் கோர் ஸ்னாப்ட்ராகன் 400 ப்ராசசர்,
- microSD அட்டை வழியாக 128GB மேலும் விரிவாக்கக்கூடிய 8 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,
- 6.7 மெகாபிக்சல் பின்புற கேமரா,
- 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
- இரட்டை சிம்,
- 3G,
- விண்டோஸ் போன் 8.1,
- 2220mAh பேட்டரி.



கருத்துரையிடுக