கிளாமரில் அசந்தும் காஜல்

தென்னிந்தியத் திரையுலகில் மற்ற ஹீரோயின்களை விட உயரத்திலும், தோற்றத்திலும் அசத்தலாக இருப்பவர்களில்
காஜல் அகர்வாலும் ஒருவர். தமிழில் பல படங்களில் நடித்திருந்தாலும், சில படங்கள்தான் அவருக்கு நல்ல வெற்றியைப் பெற்றுக் கொடுத்தன. 'ஜில்லா' படத்திற்குப் பிறகு எந்த தமிழ்ப் படத்திலும் அவர் இன்னும் ஒப்பந்தமாகவில்லை. தெலுங்கில் அவர் நடித்து இரண்டு நாட்களுக்கு முன்னர் 'கோவிந்துடு அந்தாரிவாடிலே' படம் வெளியானது. இப்படத்தில் தனது கிளாமர் நடிப்பால் தெலுங்கு ரசிகர்களை கட்டிப் போட்டு விட்டாராம் காஜல் அகர்வால். டோலிவுட்டில் இந்த 'ஹாட்டான' விஷயம்தான் தற்போது 'ஹாட்டான' டாபிக்காக உலா வருகிறதாம்.இப்படி ஒரு அசத்தலான தோற்றத்தில் இதுவரை காஜலை பார்த்ததேயில்லை என ரசிகர்கள் கூறுகிறார்களாம். படத்தில் அவருடைய ஆடையாகட்டும், நடிப்பாகட்டும் இதுவரை அவர் நடித்த படங்களிலேயே இந்தப் படத்தில்தான் சூப்பராக உள்ளது என்கிறார்களாம். 'மகதீரா' படத்திலேயே ராம்சரண் தேஜாவுடன் அவர் கெமிஸ்ட்ரி அட்டகாசமாக இருந்ததும் படத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. இந்தப் படத்திலும் ராம்சரணும், காஜலும் அதை விட நெருக்கமாக நடித்திருக்கிறார்களாம். இப்படத்தின் இயக்குனர் கிருஷ்ண வம்சி, காஜல் அகர்வாலை படத்தில் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார் என அவரை அனைவரும் பாராட்டுகிறார்களாம். இன்னும் கொஞ்ச நாளைக்கு தெலுங்கில் காஜலை யாரும் அசைக்க முடியாது என்கிறார்கள். தற்போதுள்ள போட்டியில்தான் காஜல் இந்த அளவிற்கு தாராளமாக நடித்துள்ளார் என்றும் ஒரு சிலர் சொல்கிறார்கள். 
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget