இதய நோய் பாதிப்பில் ஆண்களை விட பெண்கள் குறைவு என்றாலும் இதய நோய் பாதிப்புக்கு ஆளானதும் அவர்களை வேகமாக மாரடைப்புக்கு
கொண்டு செல்கிறது.
பெண்கள் பிற நோய் ஆபத்துகளை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் 55 வயதில் அவர்கள் ஆபத்து பற்றி கவலைப்பட வேண்டாம். ஆண்களை விட பெண்கள் 9 வயது வித்தியாசத்தில் இதய நோயால் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு நோய் வந்துவிட்டால் வேகமாக முன்னேற்றம் அடைந்து விடுகிறது.
அதுவும் மாதவிடாய் நின்ற பெண்களை இதய நோய் தாக்குகிறது. இதை தடுக்க பெண்கள் இந்த காலகட்டத்தில் சரியான உடற்பயிற்சிகளையும், உணவு கட்டுபாட்டையும் மேற்கொள்ள வேண்டும். இதய நோயானது எந்த அறிகுறியும் இல்லாமல் திடீர் என்று பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது ஆகும்.
சிறு வயதில் நமது உணவு பழக்க வழக்கங்களும், செயல்பாடுகளும் தான் பிற்காலத்தில் இதய நோயாக உருவெடுக்கிறது. இதய நோய் மேற்கத்திய நாடுகளில் 50 அல்லது 60 வயதில் தான் காணப்படுகிறது. ஆனால் நம்நாட்டில் 30 வயதிலேயே இதய நோய்க்கான அறிகுறிகள் காணப்படுகிறது.
முக்கியமாக சிறுவர்கள் தவறான உணவு பழக்கத்தால் உடல் பருமன் அதிகமாகி சிறு வயதிலேயே பல தீராத நோய்கள் வர காரணமாகி விடுகிறது. சமீபத்தில் 18 வயது மாணவன் ஒருவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
முதலில் அவன் வாயு தொல்லை என்று கண்டு கொள்ளாமல் விட்டு விட்டான். பாதிப்பு அதிகமாகி மருத்துவமனைக்கு வந்து பல்வேறு பரிசோதனைகள் செய்து பார்த்த போது தான் இதய நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
அவனுக்கு `ஸ்டெண்ட்' வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுவர்களும் பாதிக்கப்படுவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே பெற்றோர்கள் அவர்களை அறிவுறுத்தி சத்துள்ள உணவை மட்டும் வீட்டிலே சமைத்து கொடுக்க வேண்டும்.
அவர்கள் விளையாட்டிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். முன்பெல்லாம் பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இருக்கும். சிறுவர்கள் அதிக நேரம் விளையாட்டில் கவனம் செலுத்தினார்கள். ஆரோக்கியமாக மன உளைச்சல் இன்றி படிப்பில் கவனம் செலுத்தினார்கள்.
இன்றைக்கு சிறுவர்கள் ஓடி ஆடி விளையாட்டில் கவனம் செலுத்துவது குறைந்து விட்டது. பள்ளிகள் கூட விளையாட்டு போட்டிகளை வாடகைக்கு மைதானம் எடுத்து நடத்த வேண்டிய சூழ்நிலை உருவாகி விட்டது.
சிறுவர்கள் டி.வி., வீடியோ கேம்ஸ்களை தவிர்த்து விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்காக பெற்றோர்களும் டி.வி. பார்ப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

கருத்துரையிடுக