தோல் சுருக்கத்தில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம்

சிலருக்கு இளமையிலேயே தோலில் சுருக்கங்கள் விழுந்து, வயதாகிவிட்டது போன்ற தோற்றத்தை தரும். இதிலிருந்து தப்பிக்க இதோ வழிகள்.
இளமையுடன் திகழ்வதற்கு கீழ்கண்ட குறிப்புகளை பயன்படுத்தலாம். 

• முதலில், 3 முட்டைகளை உடைத்து நன்றாக கலக்கி கொள்ளவும். ஒரு தேக்கரண்டி தேன், 2 தேக்கரண்டி பால், அரை தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை எடுத்து கொள்ளவும். ஆகியவற்றுடன் கால் தேக்கரண்டி பாதாம் எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். 

இதனுடன் குளியல் சோப் துண்டுகள் சிறிதளவு சேர்க்கவும். இந்த கலவையை உடல் முழுவதும் தேய்த்து குளிக்கவும். வாரம் ஒருமுறை இந்த கலவையை தேய்த்து குளித்து வந்தால், இரண்டே மாதங்களில் தோல் சுருக்கங்கள் நீங்கி, மேனி பளபளப்பாகிவிடும். 

• அனைவருமே நல்ல பொலிவான மற்றும் எவ்வித பிரச்சனையும் இல்லாத சருமம் வேண்டும் என்று தான் விரும்புவோம். ஆனால் அத்தகைய சருமத்தைப் பெறுவது என்பது எளிதான விஷயம் அல்ல. எப்படி நமக்கு பிடித்ததை எளிதில் பெற பல இடையூறுகள் ஏற்படுமோ, அதேப் போல் அழகான சருமத்தைப் பெறவும் சில இடையூறுகள் ஏற்படும். 

அதில் முகப்பரு, பிம்பிள், கரும்புள்ளிகள், கருவளையங்கள், சூரியக்கதிர்களின் தாக்கத்தினால் ஏற்படும் சரும நிற மாற்றம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இத்தகைய சரும பிரச்சனைகள் நீங்கினாலும், அதனால் சருமத்தில் உண்டான கறைகள் அவ்வளவு எளிதில் நீங்காது. 

மேலும் அந்த கறைகளைப் போக்க பல்வேறு செயல்களை மேற்கொள்வோம். உதாரணமாக, க்ரீம், ஸ்பெஷல் ஃபேஸ் வாஷ் என்றெல்லாம் பயன்படுத்தியிருப்போம். இருப்பினும் எந்த ஒரு பலனும் இருக்காது. 

அதற்கு பதிலாக பழங்களை சாப்பிட்டால் உடலுக்கு சத்து கிடைத்தது போன்றும் இருக்கும், அதே சமயம் அதைக் கொண்டு சருமத்திற்கு மாஸ்க் போட்டால், சருமத்தை பொலிவாகவும் வைத்துக் கொள்ளலாம். குறிப்பாக இப்படி பழங்களைக் கொண்டு சருமத்திற்கு மாஸ்க் போட்டால், சருமத்திற்கு எந்த ஒரு பக்கவிளைவும் வராது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget