கோலிவுட் நாயகி இஷிதா

பெரும்பாலும் சினிமாவுக்கு பாட்டெழுதும் பாடலாசிரியர்கள் ஒரு சூழலுக்கு பாடல் எழுத வேண்டுமென்றால் அந்த கதாபாத்திரங்களை
தங்களது கற்பனையில் கொண்டு வந்துதான் வார்த்தை தேடலில் இறங்குவார்கள். ஆனால், நீ நான் நிழல் என்ற படத்திற்கு பாடல் எழுதியுள்ள கண்மணி ராஜா முகமது என்பவரிடம், இசையமைப்பாளர் ஜெசின் ராஜ் பாடலுக்குரிய டியூனை கொடுத்தபோது வார்த்தைகள் வராமல் தடுமாறினாராம்.

அவரது தடுமாற்றத்தைப் பார்த்த இசையமைப்பாளர், படத்தின் கதாநாயகியான இஷிதாவை கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருங்கள் பாட்டு தானாக வரும் என்றாராம். அதையடுத்து, அவரை இமை கொட்டாமல் பார்க்கத் தொடங்கிய கண்மணி ராஜாவுக்கு பாடல் கவித்துவமான வார்த்தைகள் மடைதிறந்தார் போல் ஓடி வந்ததாம். சிறிது நேரத்திலேயே மொத்த பாட்டையும் எழுதி முடித்து விட்டாராம்.

இதை அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது சொன்ன கண்மணி ராஜா முகம்மது, சினிமாவில் நான் எப்போதோ பாடல் எழுத வேண்டியது. ஆனால் சினேகன் உள்ளிட்ட எனது பங்காளிகள் சிலர் சினிமாவில் பாட்டெழுதிக் கொண்டிருக்கிறார்கள்.அவர்களுக்கு போட்டியாக வரவேண்டாமே என்றுதான் இத்தனை நாளும் எழுதாமல் இருந்தேன். ஆனால், இந்த படத்துக்கு நானே வசனமும் எழுதியிருப்பதால், இரண்டு பாடல்களை கண்டிப்பாக எழுத வேண்டும் என்று டைரக்டர் கேட்டுக்கொண்டதனால் பாடல் எழுத வேண்டியதாயிற்று என்றார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget