அழகு ரகசியத்தை உடைத்த ஜாக்குலின்

பாலிவுட்டின் கவர்ச்சியான நடிகையான ஜாக்குலின் பெர்ணான்டசின் முக வசீகரத்திற்கும், அழகுக்கும் காரணம் வீட்டில் உபயோகப்படுத்தும்
பொருட்கள் தானாம். இதனை அவரே தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் டில்லி வந்த அவரிடம் அவரத அழகின் ரகசியம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், எனது முக அழகிற்கான பாராட்டுக்கள் அனைத்தும் வீட்டில் உபயோகிக்கும் பொருட்களைத் தான் போய் சேரும். அதிலும் குறிப்பாக தயிர் மற்றும் தேனுக்கு தான் போய் சேர வேண்டும்.வீட்டில் உபயோகிக்கும் பல பொருட்களை என் முகத்தில் பயன்படுத்தி சோதித்து பார்ப்பேன். பெரும்பாலும் தயிரும், தேனும் கலந்து முகத்திற்கு பேக் போடுவேன். இது என் முகத்தை கூலாகவும் மென்மையாகவும் வைக்கும். அத்துடன் ஐஸ் கட்டிகளையும் பயன்படுத்துவேன். ஒரு பை அல்லது டிஸ்யூ பேப்பரில் ஐஸ் கட்டிகளை வைத்து என் முகத்திலும், கண்களிலும் வைத்து எடுப்பேன். இதனால் எனது கன்னமும், கண்களும் பளிச்சென காட்சி அளிக்கும். முகத்தை சுத்தம் செய்து கொள்வதில் நான் மிக கவனமாக இருப்பேன்.

நல்ல க்ளீனர்கள், டோனர் மற்றும் மாயிஸ்டரைசிங்களை பயன்படுத்தி எனது தோலை சுத்தமாக வைத்துக் கொள்வேன். இது தான் என் அழகின் ரகசியம் என தெரிவித்தார். இதனுடன் சமீபத்தில் சல்மானுடன் நடித்து வெளியான கிக் படத்தின் வெற்றி தனது அழகை இன்னும் அதிகப்படுத்தி இருப்பதாகவும் ஜாக்குலின் கூறுகிறார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget