மைக்ரோசாப்ட்டின் இலவச ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்

மைக்ரோசாப்ட் நிறுவனம் தரும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களின் தன்மை குறித்து பல வாசகர்கள் கடிதங்கள் எழுதி உள்ளனர். இவர்களில்
பெரும்பாலானவர்கள், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ் மற்றும் விண்டோஸ் டிபண்டர் புரோகிராம்கள் செயல்பாடுகள் குறித்துத் தெரியாமல் உள்ளனர். அவை குறித்த தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.

இவை இரண்டும் இருவகையான வைரஸ் மற்றும் மால்வேர் புரோகிராம்கள். விண்டோஸ் டிபண்டர், பெர்சனல் கம்ப்யூட்டரை ஸ்பை வேர் எனப்படும், நம் தகவல்களைத் திருடும் புரோகிராம்களுக்கு எதிரான பாதுகாப்பினைத் தருகிறது. செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ் புரோகிராம் இந்த பணியைச் செய்வதுடன், கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்து, வைரஸ்களை நீக்குகிறது.
விண்டோஸ் டிபண்டர் இணையத்திலும், வெளியிலும் பயன்படுத்தும் வகையில் கிடைக்கிறது. இணையத்தில் உங்கள் கம்ப்யூட்டர் இணைந்திருக்கையில், இது கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்து, உங்கள் கம்ப்யூட்டரில் தகவல்களைத் திருடும் ஸ்பைவேர் புரோகிராம்கள் இருந்தால் அவற்றைக் கண்டறியும். டவுண்லோட் செய்து, இன்ஸ்டால் செய்து பயன்படுத்தும் வகையில் உள்ள விண்டோஸ் டிபண்டர் புரோகிராமும் இதே திறனைக் கொண்டுள்ளது. 

இதனை, நம் கம்ப்யூட்டர் செயல்படத் தொடங்கும் முன்னரே இயக்கி, கம்ப்யூட்டரில் உள்ள ஸ்பைவேர் புரோகிராம்களை நீக்கலாம். இதற்குத் தேவை இந்த புரோகிராம் ஒரு ப்ளாஷ் ட்ரைவ் அல்லது வெளியிலிருந்து இணைக்கப்படக் கூடிய ஹார்ட் ட்ரைவில் இருக்க வேண்டும். ஆனால், தற்போதுள்ள விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வரும் விண்டோஸ் டிபண்டர், கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்து வைரஸ்களை நீக்கவும் செய்கிறது. 

மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ் புரோகிராம் விண்டோஸ் டிபண்டருடன் இணைந்து இயங்கி வைரஸ் புரோகிராம்களை நீக்குகிறது. அத்துடன், ஸ்பைவேர் மற்றும் வைரஸ்களிலிருந்து கம்ப்யூட்டரைக் காக்கிறது. 

விண்டோஸ் டிபண்டர் புரோகிராம், விண்டோஸ் 8 சிஸ்டத்தில் வைரஸ் புரோகிராம்களைக் கண்டறிந்து வைரஸ்களை நீக்குவதால், அதில் மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ் புரோகிராமினை இன்ஸ்டால் செய்து இயக்க முடியாது. சிலர், விண்டோஸ் 8 சிஸ்டத்தில் உள்ள விண்டோஸ் டிபண்டர் புரோகிராமினை, மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ் என அழைக்கின்றனர். இரண்டுக்கும் இடையே உள்ள குழப்பத்திற்கு இதுவே காரணம். விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு முன்பு வந்த விண்டோஸ் சிஸ்டங்களில், விண்டோஸ் டிபண்டர் மற்றும் எசன்ஷியல்ஸ் என இரண்டு புரோகிராம்களும் தேவைப்பட்டன. 

இந்த இரண்டு புரோகிராம்களையும், மைக்ரோசாப்ட் உட்பட பல நிறுவனங்களின் இணைய தளங்களிலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஆகிய சிஸ்டங்களுக்கு இரண்டும் தேவைப்படும். 
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget