இளம் தம்பதிகள் பயணிக்கும் பேபிமூன்

திருமணமான ஜோடிகள் ஹனிமூன் செல்வார்கள். தித்திக்கும் இந்த தேன்நிலவு பயணத்தில் அவர்கள் இல்லற வாழ்க்கையின் இனிமைகளை
அனுபவிப்பார்கள். தேனிலவு போல் இப்போது இளம் தம்பதிகள் கொண்டாடும் பயணம் பேபிமூன்.  

இது கர்ப்பகாலத்தில் கணவரோடு சேர்ந்து மனைவி செல்லும் இன்ப சுற்றுலாவாகும். இது ஜாலியான பயணம் தான், ஆனால் வயிற்றுக்குள் இருக்கும் இன்னொரு உயிரும் சம்பந்தப்பட்டது என்பதால் மிகுந்த கவனமும் அவசியமாகிறது. முன்காலத்தில் கர்ப்பிணிகள் பயணத்தை தவிர்க்கவேண்டும் என்று சொல்லப்பட்டு வந்தது. 

இப்போது பயணம் ஊக்குவிக்கப்படுகிறது. அதற்கு என்ன காரணம்? 

•   கணவன் மனைவி என்ற அவர்களது இருவர் உலகத்தில் மூன்றாவது உயிர் வருவது, கர்ப்பத்ததின் மூலம் உறுதியாகிறது. கர்ப்பகாலம் எப்படியாயினும் பெண்ணுக்கு மன அழுத்தத்தை உருவாக்கிவிடத்தான் செய்கிறது. மனஅழுத்தம் போக்கப்பட்டு தாய்க்கு மனமகிழ்ச்சி கிடைத்தால் பிரசவத்திற்கு மனதளவில் தயாராகிவிடுவார். 

காப்பகாலத்தில் பெரும்பாலும் பெண்களை பெற்றோர், உறவினர்கள் சூழ்ந்துகொள்கிறார்கள். அவ்வப்போது டாக்டர்களும் வந்து ஆலோசனைகளை தந்து   கொண்டிருப்பார்கள். அப்படிபட்ட நேரத்தில் கணவரோடு கிடைக்கும் தனிமை பெரும்பாலும் பெண்களுக்கு குறைந்து விடுகிறது. அது சிலருக்கு ஏக்கத்தைகூட உருவாக்கலாம். அந்த ஏக்கத்தைபோக்க பேபி மூனை பயன்படுத்திக் கொள்கிறார்கள். 

•  கர்ப்ப காலத்தில் உடல் மற்றும் உறவு ரீதியாக பெண்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழும். அந்த சந்தேகங்களுக்கு விடை தேடி உறவை தொடரவிரும்பாத பெண்கள் கணவரை மாதகணக்கில் ஒதுக்கிவைத்து விடுகிறார்கள். அப்படி கணவரிடம் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டியதில்லை. எப்போதும் கணவரின் அருகாமை மனதுக்கு மகிழ்ச்சியையும், தன்னம்பிக்கையையும் தரும் என்பது பேபி மூன் மூலம் உணரப்படுகிறது.

• அன்னியோன்யமான அதிக நெருக்கம் கொண்ட தம்பதிகளாக இருக்கும் பல குடும்பங்களில் பிரசவம் நடந்த பிறகு பெண்ணின் வாழ்க்கை தலைகீழாக மாறிப்போய்கிடுகிறது. தாய் எந்நேரமும் குழந்தையின் மீதே கவனமாக இருக்க வேண்டியதிருக்கிறது. மனதும், உடலும் குழந்தையின் தேவைக்காக மாறிகொள்கிறது. 

சரியாக தாயால் தூங்க முடியாது. இதனால் கணவர், மனைவியால் கண்டுங்ககாணாத நிலைக்கு தள்ளப்படுகிறார். இந்த பிரசவ கால பிரிவுக்கு முன்னால் இருவரும் ஒருவருக்கொருவர் தங்களை தாங்களே பகிர்ந்து கொள்ள புரிந்து கொள்ள பேபி மூன் பயன்படுகிறது. 

• பிறக்கபோகும் குழந்தையை வரவேற்க பெற்றோர் தயாராகி கொள்ளவும பேபி மூன் துணைபுரியும். 

• ஆழமாக பார்த்தால் பேபி மூன் பயணம் தம்பதிகளுக்கு அதிக மகிழ்ச்சியை தருமா? வயிற்று குழந்தைக்கு அதிக மகிழ்ச்சியை தருமா? என்ற கோணத்தில் சிந்தித்தால், வயிற்று குழந்தைக்கும் அது அவசியம் என்பதை புரிந்து கொள்ள முடியும். 

ஏன் என்றால் கர்ப்பகாலத்தில் தாய் மகிழ்ச்சியாக இருப்பது குழந்தையின் உடல்வளர்ச்சிக்கும், மனோவளர்ச்சிக்கும் அவசியம். அந்த மகிழ்ச்சியை பேபிமூன் தாய்க்கும், வயிற்று குழந்தைக்கும் வழங்குகிறது. 

• பேபி மூன் அனுபவிக்கும் அந்த சில நாட்களில் கணவன், மனைவி மட்டுமே பொழுதை கழிப்பார்கள். அப்போது கணவரின் அருகாமை மனைவிக்கும் மட்டுமல்ல, பிறக்க போகும் குழந்தைக்கும் முழுமையாக கிடைக்கும். அதன் மூலம் தந்தைக்கும்- குழந்தைக்குமான ஆத்மபந்தமும் அதிகரிக்கும். 

• கர்ப்பிணி மனைவியை புரிந்து கொள்ளாமல் பொறுப்பே இல்லாமல் இருக்கும் சில கணவர்கள் கூட இந்த பேபி மூன் காலகட்டத்தில் மனைவியின் உடல் நிலையையும், மனநிலையையும் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப பொறுப்போடு நடந்து கொள்ள முன்வருவார்கள்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget