உலகின் மிக மெல்லிய Oppo R5 ஸ்மார்போன்

Oppo, நிறுவனம் உலகின் மெல்லிய ஸ்மார்போனான R5 ஸ்மார்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த Oppo R5
ஸ்மார்போன் 4.85மிமி திக்நெஸ் கொண்டுள்ளது. இதனுடைய விலை $499 (தோராயமாக ரூ. 30,500), எனினும், நிறுவனம் Oppo R5 ஸ்மார்போன் கிடைக்கக்கூடிய விபரங்களை வெளியிடப்படவில்லை. ஸ்மார்ட்போனின் இரண்டு மூலை பக்கங்களில் மெட்டாலிக் மற்றும் செராமிக் கொண்டுள்ளது. சில்வர், கோல்டன், கிரே போன்ற வண்ணங்களில் வருகிறது.

Oppo R5, ஸ்மார்ட்போனில் 423ppi பிக்சல் அடர்த்தி வழங்குகிறது மற்றும் 1080x1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.2 இன்ச் முழு HD AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. R5 ஸ்மார்ட்போனில் ரேம் 2GB மற்றும் Adreno 405 உடன் இணைந்து 64 பிட் அக்டா கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 615 (MSM8939) ப்ராசசர் (2.1GHz குவாட் கோர் + 1.5GHz குவாட் கோர்) மூலம் இயக்கப்படுகிறது.

இதில் சோனி IMX214 சென்சார் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா, ஒரு f / 2.0 aperture, மற்றும் எல்இடி ப்ளாஷ் கொண்டுள்ளது. 5 மெகாபிக்சல் கேமரா முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. நிறுவனத்தின் உரிமையான ColorOS 2.0.1 (ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் அடிப்படையாக கொண்டது) இயங்குகிறது, இந்த ஸ்மார்ட்போனில் ஒற்றை மைக்ரோ சிம் ஆதரிக்கிறது மற்றும் விரிவாக்கக்தக்க சேமிடிப்பு இல்லாத 16 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது.

Oppo R5, ஸ்மார்ட்போனில் 2000mAh பேட்டரி மற்றும் VOOC சார்ஜ் தொழில்நுட்பம் ஆதரிக்கிறது. ஸ்மார்ட்போன் இணைப்பு விருப்பங்கள், Wi-Fi, ப்ளூடூத், ஜிபிஆர்எஸ் / எட்ஜ், TD LTE, LTE FDD, மற்றும் மைக்ரோ-யுஎஸ்பி ஆகியவை அடங்கும். குறிப்பாக இதில் 3.5 மிமீ ஆடியோ ஜாக் இல்லை. மற்றும் வாடிக்கையாளர்கள் 3.5 மிமீ ஆடியோ ஜாக் அடாப்டர், அல்லது வயர்லெஸ் ஓ-மியூசிக் பாகங்களுக்கு தொகுக்கப்பட்ட மைக்ரோ-USB பயன்படுத்த வேண்டியிருக்கும். Oppo, R5 148.9x74.5x4.85mm மெஷர்ஸ் மற்றும் 155 கிராம் எடையுடையது. 

Oppo R5 ஸ்மார்போன் குறிப்புகள்:

  • 1080x1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.2 இன்ச் முழு HD AMOLED டிஸ்ப்ளே,
  • 423ppi பிக்சல் அடர்த்தி,
  • ரேம் 2GB,
  • Adreno 405,
  • 64 பிட் அக்டா கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 615 (MSM8939) ப்ராசசர்,
  • 13 மெகாபிக்சல் பின்புற கேமரா,
  • 5 மெகாபிக்சல் கேமரா முன் எதிர்கொள்ளும் கேமரா,
  • 16 ஜிபி உள்ளடங்கிய சேமிப்,
  • Wi-Fi,
  • ப்ளூடூத்,
  • ஜிபிஆர்எஸ் / எட்ஜ்,
  • TD LTE,
  • LTE FDD,
  • மைக்ரோ-யுஎஸ்பி,
  • ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட், ColorOS 2.0.1,
  • 2000mAh பேட்டரி,
  • 155 கிராம் எடை.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget